பாய்ஸ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமான சித்தார்த் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படு பிசியாக நடித்து வந்தார். இந்தநிலையில் சித்தா படம் மூலம் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் இவர் பிடித்தார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் சித்தார்த் நடிகை அதிதி ராவை காதலித்து வந்தார்.
தெலுங்கு படம் ஒன்றில் இணைந்து நடித்த போது இருவரும் காதலில் விழுந்தனர். பல இடங்களில் ஜோடியாக சுற்றி திரிந்த இவர்கள், கல்யாணம் விழா, ஆடியோ லான்ச் என அனைத்துக்கும் ஜோடியாக வர தொடங்கினர். இருவரும் காதலிக்கிறார்கள் என தெரிந்தாலும், இருவரும் அதை மீடியா முன் ஒப்புக்கொள்ளாமல் இருந்து வந்தனர்.
இந்தநிலையில், அதிதி ராவும் சித்தார்த்தும் இன்று காலை திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆம், தெலுங்கானாவில் உள்ள வனர்பதி மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாயக சுவாமி என்ற கோவிலில் இவர்களின் திருமணம் எளிமையாக நடந்து உள்ளது. குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று மாலை தங்களது இணையப்பக்கம் மூலம் இவர்கள் தங்களின் கல்யாண புகைப்படங்களை ரசிகர்களுக்கா வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இவர்கள் இருவருக்குமே இரண்டாவது திருமணம். சினிமாவிற்கு வருவதற்கு முன்பே தொழிலதிபரை திருமணம் செய்த அதிதி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். சித்தார்த் 2003 ஆம் ஆண்டு மேகனா என்பவரை திருமணம் செய்து 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது