‘சித்தார்த் எனக்கு ஓகே சொல்லிட்டான்’.. சந்தோஷத்தில் அதிதி ராவ் வெளியிட்ட புகைப்படம்.. வைரல்..

By Deepika

Published on:

பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் சித்தார்த், இவர் அதை தொடர்ந்து பல படங்களில் நடித்தார், தமிழில் வாய்ப்புகள் குறையவே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு பல ஹிட் படங்களை கொடுத்த சித்தார்த் முன்னணி ஹீரோவாக மாறினார்.

Aditi rao and siddharth

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என சித்தார்த் முடிவு செய்தார். அந்த வகையில் சித்தா என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்தார் நடிகர் சித்தார்த். அதே சமயம், காற்று வெளியிடை பட நடிகை அதிதி ராவை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாக மும்பையில் வசித்து வந்தனர். பல இடங்களில் ஜோடியாக சுற்றி திரிந்தஹ் இவர்கள் தங்கள் காதலை பொது வெளியில் ஒப்புக்கொள்ளாமல் இருந்து வந்தனர்.

   
Siddharth and aditi rao

இந்தநிலையில் பெற்றோர்கள் முன்னிலையில் இவர்கள் இருவருக்கும் நேற்று தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாயகி கோவிலில் திருமணம் நடைபெற்றது. கல்யாண புகைப்படங்களை இருவருமே வெளியிடாமல் இருந்து வண்டஹனர். இந்தநிலையில் தற்போது அதிதி ராவ் சித்தார்த் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

aditi siddharth engagement ring

அந்தப்புகைப்படத்தில் இருவரின் கைகளிலும் நிச்சயதார்த்த மோதிரம் இருந்தது. இரண்டு பெரிய வைர கற்களுடன் கூடிய மோதிரத்தை சித்தார்த் அதிதிக்கு தந்துள்ளார். அதேபோல் சித்தார்த் கையிலும் தங்க மோதிரம் மின்னியது. இந்த படத்தை பகிர்ந்த அதிதி எனக்கு சித்தார்த் ஓகே சொல்லிட்டான் என பதிவிட்டு தன் சந்தோசத்தை பகிர்ந்துள்ளார். பலரும் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Deepika