இளவரசி போல ஜொலிக்கும் ‘அதிதி சங்கர்’…. பொன்னியின் செல்வன் குந்தவைக்கு டஃப் கொடுப்பாரு போலயே… வியக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே…

By Begam

Updated on:

நடிகை அதிதி சங்கர் இளவரசி போல உடை அணிந்து ஜொலிக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் சங்கரின் இளைய மகள் அதிதி சங்கர்ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான முதல் படம் விருமன். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். கிராமத்து பெண்ணாக நடித்து தனது முதல் படத்திலேயே மக்கள் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளார் அதிதி. இப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி உள்ளார்.

   

முதல் படத்திலேயே மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். மேலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.  இதை தொடர்ந்து அவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டு வருகிறார். இப்படத்தினை மடோன் அஸ்வின் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது தற்பொழுது நடந்து கொண்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை அதிதி சங்கர், தற்சமயம் இளவரசி போல உடை அணிந்து அழகாக ஜொலிக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘பொன்னியின் செல்வன் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷாவிற்கு அதிதி சங்கர் சவால் விடுவார் போலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…..