பெண் ரசிகர்களின் கனவு நாயகனுடன் அடுத்த படத்தில் ஜோடி சேரும் அதிதி சங்கர்.. அதுவும் இப்படிப்பட்ட படமா..?

By Mahalakshmi on ஜூன் 25, 2024

Spread the love

பிரபல வில்லன் நடிகருக்கு நடிகை அதிதி சங்கர் ஜோடியாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் என்று அடையாளத்துடன் அறிமுகமானவர் அதிதி சங்கர். வெளிநாட்டில் டாக்டர் படிப்பை முடித்து இருந்த அதிதி சங்கர் முதன்முதலாக முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

   

   

இந்த திரைப்படம் ஓரளவுக்கு சுமாரான வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இரண்டு திரைப்படங்களிலும் ஒரு பாடலை பாடியிருக்கின்றார். நடிகையாக மட்டும் இல்லாமல் பாடகியாகவும் வலம் வருகின்றார்.

 

இதை தொடர்ந்து தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸ் அவர்களுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மியூசிக்கல் லவ் ஸ்டோரி ஆக இருக்கும் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்திற்கு ஹிருதயம் என்ற மலையாள படத்திற்கு இசையமைத்திருந்த ஹிஷாம் என்பவர் தான் இசையமைக்கப் போகிறார் எனவும் விரைவில் இப்படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் யார் என்ற தகவல் வெளியாகும் என கூறப்படுகின்றது.

நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக அநீதி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் மாஸ்டர், விக்ரம் நடித்த திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசதி இருப்பார். இருப்பினும் பல பெண்களின் கணவனாக இருந்து வருகின்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.