மிக வெட்கக்கேடானது.. விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்த அதிதி ராவ்..

By Mahalakshmi on ஜூன் 28, 2024

Spread the love

நடிகை அதிதி ராவ் தனது உடமைகளை தொலைத்து விட்டு விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்த கசப்பான சம்பவத்தை பகிர்ந்து இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த காற்று வெளியிடை திரைப்படத்தில் கார்த்திக் அவர்களுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சைக்கோ, ஹே சினாமிகா, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

   

   

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகின்றார். செக்கச் சிவந்த வானம் என்ற திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் இவர் வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இடைத்தொடர்ந்து பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சீவ் லீலா பன்சாலி இயக்கத்தில் ஹிராமண்டி என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

 

தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர் நடிகர் சித்தார்த்தை காதலித்து வருகின்ற சமீபத்தில் தான் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது. இதற்கிடையில் வெளிநாட்டிற்கு இருவரும் ஊர் சுற்றி வரும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இப்படி இருக்கும் சமயத்தில் நடிகை அதிதி ராவ் இங்கிலாந்து விமான நிலையத்தில் நடந்த ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்து இருக்கின்றார். இது குறித்து நடிகை அதிதி ராவ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருந்ததாவது: “மும்பையில் இருந்து வந்த விமானம் லண்டனில் தரையிறங்கியது. இங்கு எனது உடைமைகளை அடக்கிய லக்கேஜை எதிர்பார்த்து நான் 19 மணி நேரமாக காத்திருக்கிறேன்.

ஆனால் இன்னும் எனது சூட்கேஸ் வந்து சேரவில்லை. இது குறித்து நான் அவர்களிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் எங்களுக்கும் லக்கேஜ் டீமுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று பொறுப்பே இல்லாமல் பதிலளித்திருக்கிறார்கள். விமான நிலைய ஊழியர்கள் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. ஆனால் இன்னும் எனது சூட்கேஸ் வந்து சேரவில்லை. இது ஒரு மோசமான அனுபவம். அனைத்து பயணிகளும் காத்திருந்து வெறுப்படைந்து இருக்கிறார்கள் பசியால் குழந்தைகள் பாடி வருகிறார்கள்” என்று தெரிவித்திருக்கின்றார்.