Categories: சினிமா

பள்ளியில் படிக்கும் போதே காதல் தோல்வியானது.. அதன் பிறகு பல பேருடன் உறவில் இருந்தேன்.. ஓப்பனாக பேசிய அருவி பட நடிகை..

Spread the love

சினிமாவை பொருத்தவரை, அது யாரை எப்போது எந்த உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படி நன்கு நடிக்க தெரிந்த திறமையான பல நடிகர், நடிகைகள் சினிமாவில் உயரத்திற்கே செல்லாமல் சென்றதுண்டு. பல ஆண்டுகளுக்கு பிறகு அவர்களது திறமை மதிக்கப்படுவதும் உண்டு. அப்படியான நடிகைகளில் ஒருவர் அதிதி பாலன். 2016-ம் ஆண்டு வெளியான அருவி படத்தின் மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர் அதிதி பாலன். இன்றைய சமூக கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்பதை நெத்தி பொட்டில் அடித்தாற் போல கூறியது இப்படம். அதேவேளை பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

#image_title

இப்படத்தில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அதிதி பாலனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மிகவும் அரிதாக சில படங்களில் குணசித்ர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார் அதிதி பாலன். அப்படி இருக்க சமீபத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதிதி. இந்த நிலையில், சமீபத்தில் அவர் கொடுத்த நேர்காணல் ஒன்றில், தனது வாழ்க்கை குறித்தும் உறவுகளால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்தும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

#image_title

பள்ளியில் படிக்கும் போதே பக்கத்து பள்ளியை சேர்ந்த ஒரு பையனை காதலித்ததாகவும், பிறகு ஏற்பட்ட மனக்கசப்பால் அது பிரேக்கப் ஆகி விட்டதாகவும் கூறியிருக்கிறார். அதன் பின்னர், பலருடன் உறவில் இருந்ததாகவும், இது குறித்து தனது குடும்பத்திற்கும் தெரியும் எனவும் கூறியிருக்கிறார். சில உறவுகளில் பலர் தன்னை டார்ச்சர் செய்ததாகவும், தானும் பலரை டார்ச்சர் செய்திருப்பதாகவும், அதனால் தான் இத்தனை பிரிவுகள் ஏற்பட்டு இருப்பதாகவும் வெளிப்படைஇயாக கூறியிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படத்திற்கு வரும் கமெண்டுகளுக்கு தனது தந்தை தான் ரிப்ளே செய்வார் எனவும் அவர் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

#image_title

Archana

Recent Posts

இதென்ன புது ட்ரெண்டா இருக்கு…? ராஜினாமா செய்தால் புதிய ஆள் எடுக்க மாட்டீங்களா…? கார்ப்பரேட் நிறுவனங்களைக் கிழித்த மும்பை பெண் சி.ஏ…!!

நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றாலோ அல்லது வேலையை விட்டு நீக்கப்பட்டாலோ, அந்த…

22 minutes ago

“பேசாம இந்தியாவுக்கே போயிட்டு வரலாம்…” ஒரு பல்லை பிடுங்குவதற்கு இத்தனை லட்சமா…? அமெரிக்க மருத்துவமனையின் கட்டணத்தை பார்த்துத் தலைசுற்றிப்போன NRI…!!

அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் நிதின் மல்ஹோத்ரா என்ற இந்தியர், அங்குள்ள மருத்துவக் கட்டணங்களின் கொடூர நிதர்சனத்தைச்…

34 minutes ago

“இன்ஸ்டா ஸ்டிக்கரால் கிடைத்த லேப்டாப்…” நெட்டிசன்களின் இதயங்களை வென்ற ஆட்டோ ஓட்டுநரின் செயல்…! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்…!!

இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு நடுவே, வாலிபர் ஒருவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த…

54 minutes ago

அய்யய்யோ… டெரஸில் கிரில் வைக்கக் கூடாதுனு… இவ்வளவு பெரிய அக்கிரமமா?… பெண்ணை அடித்துத் துவைக்கும் பகீர் வீடியோ… நலசோபராவில் கொதித்தெழுந்த மக்கள்…!

நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…

59 minutes ago

ஐயோ… நீதி கேட்கக் கூடாதா சார்?… முதல்வர் வருகையின்போது கதறி அழுத… கொல்லப்பட்ட சிறுவனின் பெற்றோர் மீது… பெண் காவலர் நடத்திய அதிர்ச்சித் தாக்குதல்… உ . பி – யில் பரபரப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…

1 மணத்தியாலம் ago

அடே… என் மச்சான் யாருன்னு உனக்குத் தெரியுமா?… சமூக வலைதள வீரரை அடித்து துவம்சம் செய்த அதிரடி மோதல்… இணையத்தில் வீடியோ வைரல்…!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…

1 மணத்தியாலம் ago