Categories: சினிமா

ஜெயலலிதா முதல் மெட்டிஒலி சீரியல் இயக்குனர் திருமுருகன் வரை கின்னஸ் ரெக்கார்ட் செய்த தமிழ் திரைபிரபலங்கள்..

Spread the love

தமிழ் சினிமா நடிகர், நடிகையர் இத்தனை விஷயங்களில், இவ்வளவு பெரிய இமாலய சாதனைகளை செய்திருக்கிறார்களா என்பதே பலத்த ஆச்சரியத்தை தருகிறது. உண்மையில், திரைக்கு பின்னால் சினிமா கலைஞர்களின் அதிசயமான சாதனைகள் வியப்பை தருகிறது. பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம், 16 மொழிகளில் 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

1981ம் ஆண்டில், பிப்ரவரி 8ம் தேதி ஒரே நாளில், காலை 9 மணி முதல் இரவு 9 மணிக்குள் 27 கன்னட பாடல்களை பாடி முடித்திருக்கிறார். இப்படி பல சாதனைகளை செய்தவர் S.P.பாலசுப்ரமணியம். அடுத்து, ஆச்சி என அழைக்கப்படும் மனோரமா 1000 படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற சாதனை படைத்திருக்கிறார். 1985ம் ஆண்டிலேயே இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 1000. அதன்பிறகும் 2015ம் ஆண்டு வரை 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

அடுத்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடத்திய 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்த வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பர திருமணம், கின்னஸ் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளது. இதில் மாப்பிள்ளை டிரஸ் மட்டுமே ரூ. 27 லட்சம். ஒரு வேளைக்கு 25 ஆயிரம் சாப்பிடும் வகையில் பந்தி என்று நடந்த பிரமாண்ட திருமணமாக, இது கின்னஸில் இடம்பெற்றது.

நடிகர் பிரேம் நசீர், 724 படங்களில் ஹீரோவாக நடித்து சாதனை செய்திருக்கிறார். இதில், 110 படங்களில் ஷீலா என்பவர் மட்டுமே இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு படங்களை இயக்கிய இயக்குநர் திருமுருகன், மெட்டி ஒலி, நாதஸ்வரம் டிவி சீரியல்களை இயக்கியவர். இவர், நாதஸ்வரம் சீரியலை சிங்கிள் ஷாட்டில், லைவ் 23 நிமிடங்கள், 25 நொடிகள் இயக்கி கின்னஸ் சாதனை புரிந்தார்.

அடுத்து, 1999ம் ஆண்டில் வெளியான சுயம்வரம் படம், 23 மணி நேரம், 58 நிமிடங்கள் என ஒரே நாளில் எடுக்கப்பட்டது. கிரிதரிலால் நாக்பால் என்பவர் இயக்கத்தில் இந்த படமும் சாதனை படைத்தது.

அடுத்து பாடகி சுசீலா, 12 மொழிகளில் 17,695 பாடல்களை சோலோ டூயட் பாடல்களை பாடியவர் என்ற கின்னஸ் சாதனை புரிந்தவர்.

அடுத்து இசைப்புயல் AR ரகுமான் இசையில் இன்டிபென்டண்ட் ஆல்பமாக வெளியான வந்தே மாதரம் பாடல், 265 மொழிகளில் பாடப்பட்டு, மியூசிக் கம்போஸர் என்ற முறையில், கின்னஸ் புத்தகத்தில் ஏஆர் ரகுமான் இடம்பிடித்தார்.

அடுத்து மனோரமாவை போலவே 1000 படங்களுக்கு மேல் நடித்த, இன்னும் நடித்துக்கொண்டு இருக்கிற பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் கின்னஸ் சாதனை படைத்தவராக உள்ளார்.

அடுத்து கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில், ஆமெஸ் ரூம் இல்யூசன் முறையில் கண்களை ஏமாற்றும் வித்தையில் ஒரு அறைக்குள் 4 பேரை நடனமாட வைத்த டான்சர் கலாமாஸ்டர் கின்னஸ் ரெக்கார்டு புரிந்துள்ளார். இப்படி 10 விதமான சாதனைகளை புரிந்த நடிகர், நடிகையர் கின்னஸ் ரெக்கார்டு சாதனையாளர்களாக சினிமாவுக்கு புகழ் சேர்த்துள்ளனர்.

admin

Recent Posts

“பிள்ளைகளை வளர்ப்பது அம்மா.. நல்ல அப்பானு பெருமை பேசுவதா…? ரவி மோகனை மறைமுகமாக அட்டாக் செய்த ஆர்த்தி…!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.…

11 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… என் மானத்தை காப்பாத்த இதான் வழி… சாதி வெறியால் தூங்கிக் கொண்டிருந்த… 17 வயது மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை… ஆக்ராவில் பகீர் சம்பவம்…!

ஆக்ராவில் ஜாதிய மறுப்பைத் தாண்டி உறவுமுறையில் ஈடுபட்டதாகக் கூறி, 17 வயது சிறுமி அவரது தந்தையாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்…

11 minutes ago

ஐயோ பாவம்… கல்லூரிப் பேருந்து மோதி… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த… 3 மாணவிகள் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள சக்கரம்பாளையம் சந்திப்பில் நிகழ்ந்த கோர சாலை விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை…

21 minutes ago

“கை, காலில் தொற்று…?” தளராமல் கைகளால் ஆற்றை சுத்தம் செய்யும் வாலிபர்… நகராட்சியை நோக்கிக் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்…!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு தபாஹி என்ற 20 வயது கல்லூரி மாணவர், தனது பகுதியில் உள்ள மாசடைந்த ஆஜனார்…

32 minutes ago

“நம்ம 2 பேரும் ஃப்ரண்ட்ஸ்”…. மாணவியிடம் HM செய்த காரியம்…. வெளிவந்த அதிர்ச்சி உண்மை… பதறும் தமிழகம்….!

திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரு தலைமை ஆசிரியர்கள் போக்சோசட்டத்தின்…

57 minutes ago

விஜய் தான் அடுத்த பிரதமரா?…. “என்னை சிக்கல்ல மாட்டி விடாதீங்க”…. செய்தியாளர்கள் கேட்ட கேள்வியால் அலறிய அமைச்சர் செங்கோட்டையன்….!

தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமர் என்ற பேச்சுக்கள் அக்கட்சியினரிடையே தீவிரமடைந்து வந்தன.…

1 மணத்தியாலம் ago