‘எதிர்நீச்சல்’ ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது உண்மை தான். ஆனால்?… ட்விஸ்ட் வைத்த நடிகர் வேல ராமமூர்த்தி…

By Begam

Published on:

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வந்தவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக ‘ஏமா ஏய்’ என்று இவர் கூறும் வசனம் மீம் ஆக மாறியது. இவர் 1994ஆம் ஆண்டு பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்ட மாரிமுத்துவிற்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் மாரிமுத்து நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

   

இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து ஒருவரும் மீளவில்லை.  57 வயதாகும் இவருடைய மரணத்திற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தற்பொழுதும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

தற்பொழுது மாரிமுத்துவுக்கு பதில் தற்போது வேல ராமமூர்த்தி தான் ஆதி குணசேகரன் ரோலில் நடிக்கபோவதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகர் வேல ராமமூர்த்தி கொடுத்திருக்கும் பேட்டியில் தனக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்திருப்பது உண்மை தான் என கூறி இருக்கிறார்.

ஆனால் தான் தற்போது பிசியாக படங்களில் நடித்து வருவதாகவும், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க தற்போது பேச்சுவார்த்தை தான் நடந்து வருகிறது, இன்னும் உறுதியாகவில்லை என கூறியுள்ளார். ஆனால் ரசிகர்கள் எத்தனை பேர் வந்தாலும் அவருக்கு ஈடாக மாட்டார்கள் என்று வேதனையுடன் கூறி வருகின்றனர்.