தற்போது போன வருட பொங்கலுக்கு அஜித்தின் துணிவு படம் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்டபின், அதற்கடுத்ததாக தடம், கழகத் தலைவன் போன்ற மாபெரும் வெற்றிகளை குவித்த மகிழ்த்திருமேனி அவர்களுடன் இணைந்து “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படம் ஒரு வருட காலமாக எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது சில பல பிரச்சனைகளை சந்தித்த இப்படம், படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் வெளியாக உள்ள இப்படம், இன்னும் படபிடிப்பை முடிக்காத நிலையில் இருப்பதால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்கள். ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக அஜித்தின் 63 வது படம் பற்றி அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்கள். திரிஷா இல்லனா நயன்தாரா, AAA போன்ற படங்களில் எடுத்து படு தோல்வியை சந்தித்த ஆதிக்கவிச்சந்திரன் கடந்த ஆண்டு விஷால் மற்றும் எஸ் ஐ சூரியா அவர்களை வைத்து இயக்கிய மார்க் ஆண்டனி படம் யாரும் எதிர்பாராத அளவுக்கு பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பியது.
மாபெரும் வெற்றி அடைந்த பின் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் அஜித்தை வைத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது, அதை தொடர்ந்து தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அப்டேட் சரியாக வெளியாகாமல் இருந்த நிலையில், அஜித்தின் 63-வது படத்தின் டைட்டிலை தயாரிப்பாளர் வெளியிட்டு இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மை 3 மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் தான் “குட் பேட் அக்லி”. தற்போது, ரசிகர்கள் எதிர்பார்க்காத சமயத்தில் இப்படத்தின் டைட்டளை பற்றியும் இப்பட அப்டேட்டை பற்றியும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
தற்போது ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி அடைந்த மார்க்கண்டினி படத்தில் வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யா அவர்கள் தற்போது 17 வருடம் கழித்து அஜித்துடன் இணைகிறார். அஜித் தற்போது நடித்த வரும் படத்தை தாண்டி படத்தின் அப்டேட்டை தீயாக வெளியிட்டு இருக்கிறார் தல 63வது படம் இயக்குனர். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக்கிரமிச்சந்திரன் தலையைப் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை பேசி உள்ளார்; அதாவது, சினிமாவுக்கு வரதுக்கு முன்னாடி அஜித்தோட பயங்கரமான ரசிகரா இருந்தா, அப்பதான் திடீர், அந்த சமயத்துல தல, நான் எந்த பொது நிகழ்ச்சிக்கும் வரமாட்டேன்னு சொல்லி அறிக்கை விட்டார்.
என்னால் அதை ஏத்துக்கவே முடியல, அஜித்தோட வீட்டுக்கு முன்னாடி போய் நின்னு அழுது கத்துக்கணும் நானும் என் நண்பர்களும், சார் கண்டிப்பா நீங்க பொதுவெளிக்கு வரணும் மக்களை சந்திக்கணும் ரசிகர்களை பாக்கணும்னு சொல்லி அழுத, அவருக்கு கேக்குதோ இல்லையோ என் கடன் அது தான் சொல்லி நான் என் மனசுல பட்டதெல்லாம் பேச ஆரம்பிச்சேன், ஆனா எனக்கு அப்பவே தெரியும் இவர வச்சு நான் ஒரு பெரிய விஷயம் பண்ண போறேனு, இவர நேர்ல பார்த்தா அது ஒரு பெரிய சம்பவமாக தான் இருக்கும் நினைச்சேன், அதே மாதிரி தான் இப்ப இந்த படத்துல வந்து அமைஞ்சிருக்கு. நான் கூட AAA படத்துல சிம்பு சார்ட சொல்லிட்டேன் இருப்பேன், நான் அஜித் சார் வச்சு தான் பெரியா படம் ஒன்னு பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தேன். அதே மாதிரி தான் இப்ப நடந்திருக்கு. நான் எந்த அளவுக்கு அஜித் ரசிகர்னா, எப்பவுமே எல்லா எமோஷனுக்கும் அஜித் பாடல் தான் கேட்பேன், அந்த அளவுக்கு நான் தீவிரமான ரசிகன். என்று ஆதிக்க ரவிச்சந்திரன் அவர்கள் அஜித்தை பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
#GoodBadUgly – #AjithKumar ????pic.twitter.com/CPuPIhGLbH
— Movie Tamil (@MovieTamil4) March 15, 2024