பிரபல நடிகரான அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பெனில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்து புது கெட்டப்பில் உள்ளார்.

இந்த நிலையில் பட குழுவில் உள்ள யாரோ ஒருவர் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அது வைரலானது. இந்த நிலையில் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் நியூ லுக் சோசியல் மீடியாவில் வைரலானதால் அப்செட்டில் உள்ளாராம்.

இதனால் சுமார் 4 மணி நேரம் சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு பட குழுவினரை அழைத்து அறிவுரை கூறியுள்ளார். ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என ஒவ்வொன்றையும் யோசித்து செய்கிறோம். இப்படி இனிமேல் பண்ணாதீங்க என அட்வைஸ் கொடுத்துள்ளார். மற்றும் ஒரு தகவல் என்னவென்றால் குட் பேட் அக்லி படத்தை ஸ்பெயினில் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையாம்.

ஆனால் அஜித் ரேஸ் தொடர்பான போட்டியில் பங்கேற்க உள்ளதால் அவர் பயிற்சி எடுப்பதற்காக ஸ்பெயினை தேர்ந்தெடுத்துள்ளனர். சூட்டிங் போக மீதி இருக்கும் ஓய்வு நேரங்களில் அஜித் பயிற்சியில் ஈடுபடுவதற்காக ஸ்பெயின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வலைப்பேச்சு யூடியூப் சேனலில் கூறியுள்ளனர்.
