முன்னணி காமெடி சேனலில் காமெடியாக பேசிய மக்களின் மனம் கவர்ந்தவர் ஆதவன். நிகழ்ச்சி தொகுப்பாளர் மிமிக்ரி கலைஞர் டப்பிங் கலைஞர் நடிகர் என பல அடையாளங்களை கொண்டவர். சில திரைப்படங்கள் டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்ச்சி தான் ஆதவனை பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
இந்நிலையில் அவர் தனது மனைவி விலாசினியுடன் தங்களது மகளின் பிறந்த நாளை கொண்டாடும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆதவன் தனது முதல் மனைவியை விவகாரத்து செய்து பிரிந்த நிலையில் பிரபல சீரியல் நடிகை விலாசினியை 2வது திருமணம் செய்திருக்கிறார். ஸ்ரீதிவ்யா ரெஜினா கசாண்ட்ரா நிவேதா பெத்துராஜ் போன்ற நடிகைகளுக்கு அவர்கள் நடித்த படங்களில் பின்னணி குரலில் விலாசினி, டப்பிங் வாய்ஸ் கொடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் நெருங்கிய சொந்தக்காரர் விலாசினி என்பதும் கூடுதல் தகவல். விலாசினியும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விலாசினி விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் குழலி என்ற கேரக்டரில் நடித்தும் வருகிறார். சட்ட ரீதியாக தங்களது முதல் திருமணத்தை வெளியேற பிறகுதான் ஆதவன் – விலாசினி இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர். மகளின் பிறந்த நாளில் அவர்களது 2வது திருமணம் குறித்த தகவல் இப்போதுதான் ரசிகர்களுக்கு தெரிய வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
