தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் மூலமாக இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் விஜய் மிகப் பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார்.
இந்நிலையில் விஜயின் உத்தரவின் பேரில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் ஆதவ் அர்ஜுனா டெல்லியில் காங்கிரசை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரை ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றி கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் முன் ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. மேலும் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள காங்கிரசை தமிழக வெற்றி கழகம் நாடி உள்ளதாகவும், காங்கிரஸ் முக்கிய தலைவர்களை ஆதவ் அர்ஜுனா சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
