“கடந்த ஆட்சியில் செஞ்ச சட்டக் குளறுபடி இதுதான்”….. ஸ்டாலினுக்கு ஆதாரத்தோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

Spread the love

காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தது உண்மைக்கு மாறானது என்று நீர்வளத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், மாநிலத்தின் குடிநீர் உரிமையையும் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் முழுமையாக அமல்படுத்தப்படும் வரை அரசின் சட்டப் போராட்டம் தொடரும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

மாநிலத்தின் நீராதார உரிமைகளை நிலைநாட்ட அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகளைப் பட்டியலிட்டுள்ள அமைச்சர், முதலமைச்சர் அவர்கள் கடந்த 27.05.2026 அன்று பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்ததைச் சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து, 19.06.2026 அன்று பிரதமருக்கு அனுப்பிய D.O. No.48/2026 கடிதத்தில், கர்நாடக அரசின் ஒருதலைப்பட்சமான பூமி பூஜை அறிவிப்பு நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணானது என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என வலியுறுத்தினார். மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் இணைத்து, மத்திய நீர்வளக் குழுவிற்கும் ஜல் சக்தி அமைச்சகத்திற்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்கிடக் கேட்டுக்கொண்டார்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த சட்டக் குளறுபடிகளே தற்போதைய பின்னடைவுக்குக் காரணம் என்று குறிப்பிட்ட அமைச்சர், மேகதாது விவகாரத்தில் அப்போதைய அரசு தாக்கல் செய்த மனுக்கள் 13.11.2025 அன்றும், சீராய்வு மனு 15.04.2026 அன்றும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை நினைவுகூர்ந்தார். அதனைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவிலும் உரிய வாதங்களை திமுக அரசு வலுவாக முன்வைக்கத் தவறியதால், 25.04.2026 அன்று தலைமை நீதிபதி அமர்வால் அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்துபோன ஆட்சியில் நடந்த இதுபோன்ற தவறுகளால் காவிரிப் பிரச்சினை இன்றைக்குப் பெரிய சோதனையாக உருவெடுத்துள்ளது என்று அவர் சாடினார்.

கடந்த கால தவறுகளைச் சுட்டிக்காட்டுவது அரசியலுக்காக அல்ல என்றும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து வரும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள அரசு எப்போதும் தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். காவிரி நீர் உரிமை என்பது அரசியல் ஆதாயத்திற்கான விஷயம் அல்ல; அது டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் மற்றும் தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினை ஆகும். எனவே, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வழிகளிலும் சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து, தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு முழுமையாக மீட்டெடுக்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

2 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

3 மணத்தியாலங்கள் ago