அதிமுகவிடம் ஆதரவு கேட்டிருந்தால்… நாங்க ஈஸியா ஆட்சியமைத்திருக்கலாம்… ஆனால்.. டுவிஸ்ட் வைத்த ஆதவ் அர்ஜுனா..!!

By Soundarya on வைகாசி 22, 2026

Spread the love

அதிமுகவிடம் ஆதரவு கேட்டிருந்தால் நாங்கள் எளிதாக ஆட்சி அமைத்திருக்கலாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரான ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ஆனால், மதச்சார்பற்ற கொள்கையின் அடிப்படையில் மட்டுமே தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க வேண்டும் என்பதில் தாங்கள் மிகவும் உறுதியாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டணி மற்றும் கொள்கை ரீதியாகத் தங்களது தவெக அரசு எடுத்த முடிவுகளைப் பாதுகாத்துப் பேசியுள்ள அவர், எவ்வித சமரசமும் இன்றித் தங்களது லட்சியப் பாதையில் பயணித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தவெக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் இணைந்ததற்குப் பல்வேறு அரசியல் தரப்பில் இருந்தும் விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த முக்கியக் கருத்து அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.