BREAKING: தமிழக அரசின் அதிரடி உத்தரவு…. சற்றுமுன் ரூ.57.65 கோடி நிதி ஒதுக்கீடு…!

By Nanthini on சித்திரை 18, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கான உணவு மற்றும் இதர செலவினங்களுக்காக தமிழக அரசு ₹57.65 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகிய முக்கிய நாட்களில் ஓய்வின்றிப் பணியாற்றும் காவல்துறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டின் படி, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் இன்ஸ்பெக்டர்கள், துணை ஆய்வாளர்கள் (SI), சிறப்பு உதவி ஆய்வாளர்கள் (SSI) மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ₹900 வழங்கப்பட உள்ளது. அதேபோல், காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்களுக்கு ஒரு நாளைக்கு ₹800 படி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வீரர்களுக்கு இந்த நிதியுதவி பெரும் ஊக்கமாகவும், அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.