இந்தியாவில் சமீபத்தில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டது. அதனால் ஏற்கனவே இருந்த நான்கு அடுக்கு 5,18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்திருந்தாலும் சில பொருட்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது நெய்த மற்றும் நெசவு செய்யப்பட்ட ஆடைகள் தான். ஏற்கனவே அதற்கு 12 சதவீதம் வரி இருந்தது. ஆனால் அதில் தற்போது ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 2500 ரூபாய்க்கு மேல் ஒரு ஆடையின் விலை இருந்தால் அதற்கு வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் இதன் உண்மை நிலையை அறியாமல் பலரும் மொத்தமாக ஜவுளி வாங்கும் போது 2500 ரூபாய்க்கு மேல் பில் வந்தால் பிரித்துப் பிரித்து பில் போட சொல்கின்றன. அதாவது 2500 ரூபாய் விலை வருவதால் ஜிஎஸ்டியை குறைக்க இதே போல செய்கின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை வருவதால் துணி எடுக்கும் வேளையில் கடைக்காரர்களுக்கு சிக்கலை தருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒரு ஆடையின் விலை மட்டும் 2500 ரூபாய்க்கு மேல் இருந்தால் ஜிஎஸ்டி வரி 18 சதவீதம்.
மற்றபடி அதற்கு கீழ் உள்ள தொகையில் மொத்தமாக எவ்வளவு மதிப்புக்கு ஆடை வாங்கினாலும் அதற்கு 18 சதவீதம் கிடையாது என்று தெரிவித்துள்ளனர். அதேபோல பஞ்சை இடையில் வைத்து தைக்கப்படும் குயில்ட் மெத்தைகள், கம்பளிகள் ஆகியவையும் பொருள் ஒன்றுக்கு 2500 ரூபாய்க்கு மேல் இருந்தால் 18 சதவீதம் வரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…
உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…
ஆக்ரா எக்தா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 17 வயதுடைய இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 6:30…
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…
மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கையால், மும்பை வீதியோர உணவகங்களில் பெரும் மாற்றம்…
தன் காதலனுடன் ரெஸ்டாரண்ட், ஹோட்டல் மற்றும் மால் போன்ற இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்க்கக் கையில் பணமில்லாமல் தவித்த இளம்பெண் ஒருவர்,…