BREAKING: கேஸ் சிலிண்டர்கள்… மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு…!!

By Soundarya on பங்குனி 27, 2026

Spread the love

வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டைக் குறைக்கும் நோக்கில், அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக 20% வணிக சிலிண்டர்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் மக்கள் மற்றும் சிறு தொழிலாளர்கள் சந்தித்து வரும் சிரமங்களைக் களைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்களை முன்னுரிமை அடிப்படையில் ஆட்டோமொபைல் மற்றும் டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரான் போருக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த விநியோக அளவோடு ஒப்பிடுகையில், தற்போது 70% அளவு வணிக சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த கூடுதல் ஒதுக்கீடு அறிவிப்பு, தொழில் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் வரும் நாட்களில் தட்டுப்பாடு குறைந்து இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.