BREAKING: இன்று ஒரு நாள் மட்டும்… தமிழக அரசு HAPPY NEWS…!

By Nanthini on வைகாசி 29, 2026

Spread the love

தமிழகத்தில் சுபமுகூர்த தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக இன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்களை ஒதுக்கீடு செய்ய பதிவுத்துறை தலைவர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய உத்தரவின்படி, ஒரு சார்பதிவாளர் மட்டுமே உள்ள அலுவலகங்களில் வழக்கத்தை விட கூடுதலாக 150 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 300 டோக்கன்களும் பொதுமக்களுக்கு ஒதுக்கப்படவுள்ளன.

மேலும், மாநிலத்திலேயே அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் முதன்மையான 100 அலுவலகங்களுக்கு தலா 150 சிறப்பு முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதால், முகூர்த நாளன்று எவ்வித தங்குதடையுமின்றி பொதுமக்கள் தங்கள் சொத்து மற்றும் திருமணப் பதிவுகளை விரைவாகவும் எளிதாகவும் மேற்கொண்டு பயனடைய முடியும்.