குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ஊர்வசி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தற்போதும் கூட தன்னுடைய வயதுக்கு ஏற்ற வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அவருடைய திரைப்பட வாழ்க்கை வெற்றிகரமாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிரமங்கள் இருந்துள்ளது. தன்னுடைய வாழ்க்கையில் சிரமங்களை சந்தித்ததாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஊர்வசி, எனக்கு முதல் திருமணம் ஆகி மாமியார் வீட்டிற்கு சென்றபோது அந்த சூழல் மிகவும் புதியதாக இருந்தது. வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக குடித்துவிட்டு சாப்பிடுவார்கள்.
தவிர்க்க முயன்றும் அந்த பழக்கங்களில் நானும் ஒரு கட்டத்தில் சிக்கிக்கொண்டேன். படபிடிப்பிலிருந்து திரும்பியதும் மது அருந்துவது ஒரு பழக்கமாகவே மாறியது. படிப்படியாக அது ஒரு போதையாக மாறிவிட்டது. ஏற்கனவே நான் வீட்டு பொறுப்புகளை சுமந்து கொண்டு இருந்ததால் எனக்கு விருப்பமில்லாத பல விஷயங்களை செய்தேன். வீட்டில் எனது கருத்துக்களுக்கு ஏற்ற மதிப்பு கிடைக்காத போது கோபத்திலும் வேதனையிலும் இன்னும் அதிகமாக மது அருந்த தொடங்கினேன். குடித்துவிட்டு உணவு மற்றும் தூக்கத்தை தவிர்த்து என் உடல் நலத்தை கெடுத்துக் கொண்டேன்.
பிறகு என்னுடைய நண்பர்கள் மற்றும் தனிப்பட்ட ஊழியர்களின் உதவியுடன் அந்த பழக்கத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டும் வந்தேன் என்று ஊர்வசி உருக்கமாக பேசியுள்ள நிலையில் அவருடைய இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஊர்வசியை கடந்த 2000 ஆம் ஆண்டு மனோஜ் ஜெயனை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு தேஜா லக்ஷ்மி என்ற மகள் உள்ளார். ஆனால் 2008 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன் பிறகு ஊர்வசி 2013 ஆம் ஆண்டு சிவ பிரசாத்தை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…