Categories: சினிமா

சூப்பர் ஹீரோக்களுடன் நடித்தும் ஒரே படத்தில் காணாமல் போன நடிகைகள்.. யார் யார் தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகள் ஏராளம். அதே சமயம் சூப்பர் ஹீரோக்களுடன் நடித்தும் பிறகு பட வாய்ப்பு கிடைக்காததால் சினிமாவை விட்டு காணாமல் போனவர்களும் உள்ளனர். அதன்படி தமிழில் சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் ஒரே ஒரு படத்தில் நடித்து பேமஸ் ஆகி அதன்பிறகு அட்ரஸ் தெரியாமல் போன நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மானு:

அஜித்தின் கிளாசிக் படம் தான் காதல் மன்னன். இந்தத் திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் மானு. இந்த படத்தில் திலோத்தமா கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். இந்த படத்திற்குப் பிறகு சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சினிமாவுக்கு டாட்டா காட்டி விட்டு கணவருடன் சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு 2014 ஆம் ஆண்டு வெளியான என்ன சத்தம் இந்த நேரம் படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்த அவர் அந்தப் படம் ப்ளாக் ஆனதால் பிறகு படங்களில் நடிக்கவில்லை.

பிரியா கில்:

அஜித்துடன் நடித்து ஆள் அட்ரஸ் தெரியாமல் போன மற்றொரு நடிகை தான் பிரியா கில். சிங்கம் புலி ஏக்கத்தில் அஜித் நடித்த ரெட் திரைப்படத்தில் இவர் ஹீரோயினியாக அறிமுகமானார். அந்தப் படத்திற்குப் பிறகு சரிவர பட வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகிய இவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

மோனிகா கேஸ்ட்லினோ:

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் மின்சார கண்ணா. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இவர் பாலிவுட்டில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்தாலும் தமிழில் மின்சார கண்ணா திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த திரைப்படங்களிலும் இவர் நடிக்கவில்லை. அதேசமயம் மின்சார கண்ணா திரைப்படத்திலும் இவருடைய நடிப்பு பலரது விமர்சனங்களை பெற்றது.

ரிங்கி கண்ணா:

கோலிவுட்டில் இருந்து காணாமல் போன மற்றொரு நடிகை தான் ரிங்கி கண்ணா. இவர் பிரசாந்துடன் இணைந்து மஜ்னு திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். இவர் பாலிவுட் நடிகர் ராஜேஷ் கண்ணாவின் மகள் ஆவார். ஹிந்தியில் சில திரைப்படங்களில் நடித்த இவர் பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி விட்டார்.

ரோஷினி:

கோலிவுட்டில் இருந்து காணாமல் போன மற்றொரு நடிகை தான் ரோஷினி. இவர் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படமான குணா திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இவர் நடித்த அபிராமி கேரக்டர் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இருந்தாலும் அப்படத்திற்கு பிறகு சினிமாவை விட்டே அவர் விலகி விட்டார்.

அமோகா:

இவர் தமிழில் ஜே ஜே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனமும் இவர் மேல் திரும்பியது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஹிந்தி, தெலுங்கில் கவனம் செலுத்தி அங்கே போய்விட்டார். இவருக்கு ஆனால் தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

6 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

6 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

9 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

9 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago