கிளாமரிலிருந்து விலகி  குடும்ப குத்து விளக்காக மாறிய ‘பாபநாசம்’ பட நடிகை எஸ்தர் …. லேட்டஸ்ட்  கிளிக்ஸ் உள்ளே…

By Begam

Published on:

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த ரீமேக் திரைப்படம் தான் பாபாநாசம். இப்படத்தில் கமலுடன் இணைந்து கவுதமி, எஸ்தர் அணில், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இதில் கமல் – கவுதமியின் இளைய மகளாக நடித்திருந்தவர் நடிகை எஸ்தர் அனில்.

   

இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். பாபநாசம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்படி நடக்கவில்லை. இவருக்கு மலையாள சினிமாவே கை கொடுத்தது.

தற்போது இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற த்ருஷ்யம், த்ருஷ்யம் 2 ஆகிய படங்களில் எஸ்தர் நடித்திருந்தார்.சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை எஸ்தர் அனில்.

இவர் அவ்வப்பொழுது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆனால் தற்பொழுது இவர் கிளாமர் ரூட்டில் இருந்து மாறி ஹோம்லி லுக்கில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘அவரா இது?’ என ஆச்சரியத்தில் உள்ளனர்.