Categories: சினிமா

நான் கர்ப்பமாக இருந்தேன் ; தெரிஞ்சதும் ரஜினி சார் பதறிட்டார்… முதல்முறையாக ரகசியம் பகிர்ந்த நடிகை ஒய்.விஜயா

Spread the love

70, 80களில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 700க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் தான் நடிகை ஒய்.விஜயா. வாணி ராணி என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் கதாநாயகியாக, வில்லியாக, குணசித்திர நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன், ஜெயலலிதா, ரஜினி என பெரிய ஆளுமைகளுடன் இவர் நடித்துள்ளார்.

Actress Y Vijaya

அதுமட்டுமல்ல என்.டி.ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ் உள்பட தெலுங்கு சினிமாவின் பெரிய நடிகர்களுடன் இவர் நடித்து பிரபலமானவர். குறிப்பாக கமலுடன் இவர் இனைந்து நடித்த ஹலோ மை டியர் ராங் நம்பர் பாடம் இன்றளவும் மக்களிடத்தில் பேமஸாக உள்ளது. பழம்பெரும் நடிகையான இவர், தன்னுடைய சினிமா பயணத்தில் நடந்த சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறியதாவது, கமல் ரஜினி என்னுடன் மிக அன்பாக பழகுவார்கள். ஆறு புஷ்பங்கள் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவே நான் நடித்தேன். அதன்பின் பைரவி, நல்லவனுக்கு நல்லவன், தனிக்காட்டு ராஜா, ராஜாதி ராஜா படங்களில் அவருடன் நடித்துள்ளேன். அப்படி எனக்கு திருமணமான சமயத்தில் ரஜினி என்னை தேடி வந்து, எனக்கு வாழ்த்து சொன்னார். என்னால் இன்றும் அதை மறக்க முடியாது.

Y Vijaya and Superstar Rajinikanth in rajadhi raja

அதேபோல் ராஜாதி ராஜா படம் ஆரம்பிக்கும்போது நான் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தேன், யாருக்கும் சொல்லவே இல்லை. ஷூட்டிங் பல மாதங்கள் நடந்தது. அப்போது அனைவருக்கும் தெரிந்து விட்டது. ரஜினியோ விஷயம் தெரிந்து பதறி போய்விட்டார், ஏன் மா முதலே சொல்லவில்லை என கேட்டு என்னை அன்பாக பார்த்து கொண்டார். அடிக்கடி வந்து நான் சாப்பிட்டேனா இல்லையா என விசாரிப்பார்.

Rajadhi raja climax

அந்த படத்தின் க்ளைமாக்ஸ் நடக்கும்போது எனக்கு எட்டு மாதம், ஷூட்டிங்கோ ஒரு மலை மீது. ரஜினி வந்து என்னை டோலியில் வைத்து தூக்கி செல்வோம் என்றார், நான் தான் பரவாயில்லை என கூறி நடந்தே சென்றேன். என் டீமோ என்னை கடிந்துகொண்டார், மலை மீது ஏறிய பின் சுந்தர்ராஜன் சொல்கிறார், இந்த மலை இல்லை பக்கத்துக்கு மலையில் தான் ஷூட்டிங் என்று. மீண்டும், இறங்கி ஏறி ஷூட்டிங் செய்து வந்தோம், ஆனால் ரஜினி சார் என்னை அன்பாக பார்த்து கொண்டதை இன்னும் என்னால் மறக்க முடியாது என கூறினார் நடிகை ஒய்.விஜயா.

Deepika

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

7 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

7 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

7 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

7 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

7 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

7 மணத்தியாலங்கள் ago