கே பாலகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் ரம்மி. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் இந்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் முதலில் நடிகை சாந்தினி தான் நடிக்க இருந்தாராம். அதன் பிறகு தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இதை சாந்தினி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இளம் நடிகை சாந்தினி தமிழரசன், இவர் “சித்து பிளஸ் 2 படத்தில் அறிமுனமானார். “நான் ராஜாவாகப் போகிறேன்” , “வில்லம்பு”, “லவ்வர்ஸ்”, கண்ணுல காச காட்டப்பா, பில்லா பாண்டி, பலூன், மன்னார் வகையறா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இவர்.

அதற்கு பின் சினிமா வாய்ப்புகள் சற்று குறைந்ததால் சீரியல்களில் நடிக்க தொடங்கினார் நடிகை சாந்தினி. மேலும் “ரெட்டை ரோஜா” என்ற தொடரில் இரட்டை வே டத்தில் நடித்து வந்தார். அந்த சீரியலில் முதலில் ஷிவானி நாராயணன் ஹீரோயினாக நடித்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது. சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் அசிட்டிவாக வளம் வருபவர் தான் சந்தினி அவர்கள். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
