தமிழ் சினிமாவில் நடன மங்கைகளாக அறிமுகம் ஆனவர்கள் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள். அதில் பத்மினி மட்டும் தன்னுடைய நடிப்புத் திறனால் ஹிரோயினாக மாறி 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் கலக்கினார். அதுமட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கூட நடித்தார்.
பத்மினி நடனமாடியதில் ஜெமினியின் வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணும் கண்ணும் என்ற பாடலில் பத்மினியும் வைஜெயந்தி மாலாவும் நடனமாடினார். இந்த பாடலில் எப்படியாவது பத்மினியை விட சிறப்பாக நடனமாடி விடவேண்டுமென வைஜெயந்தி மாலா ரகஸ்யமான நடன இயக்குனர் ஹீராலாலிடம் நடன அசைவுகளைக் கற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால் படப்பிடிப்பு சமயம் பத்மினியின் நடனம் அமோகமாக அமைந்தது. வைஜயந்தி மாலா புளகாங்கிதம் அடையவில்லை. அவர் ‘சாதுர்யம் பேசாதேடி, என் சலங்கைக்கு பதில் சொல்லடி’ என்று தோளிலே சடைதுவழ, காலிலே தீப்பொறி பறக்க, புயல்போல சுழன்றபடி மேடையிலே தோன்றுவார்.
ஒருமுறை இருவரும் ஆடும்போது பத்மினியின் நிழல் வைஜயந்தி மாலாவின்மேல் விழுந்தது. பத்மினி மன்னிப்பாக நடனத்தை நிறுத்தி ‘என்னுடைய நிழல் உங்கள் மேலே விழுகிறது’ என்றார். உடனேயே வைஜயந்தி மாலா ஆங்கிலத்தில் இரண்டு அர்த்தம் தொனிக்க ‘It’s only a passing shadow’ என்றார். அதாவது நீ ஒரு நிழல்போலதான். என்னைப்போல ஸ்டார் ஆக முடியாது என்பது போல கமண்ட் செய்திருந்தார்.
தன்னைப் பற்றி இப்படி ஒரு மோசமான கமெண்ட்டை அடித்ததால் அதைக் கேட்டு மனமுடைந்த பத்மினி இரண்டு நாட்கள் அழுதாராம். ஆனால் அந்த படம் ரிலீஸான பின்னர் பத்மினியின் நடனம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் பத்மினி கதாநாயகியாகி தமிழ் சினிமாவில் கோலோச்சினார். வைஜெயந்தி மாலா வழக்கம் போல வட இந்திய சினிமாக்களில் மட்டுமே நடித்து உச்சத்தை தொட்டார்.