தமிழில் நடிகர் ரகுமான் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் தான் சங்கமம். இந்தத் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய 17 வயதில் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் நடிகை விந்தியா. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. படத்தில் பரதநாட்டிய கலைஞராக நடிகை விந்தியா நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி முழுமையாக அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் ஜெயலலிதா அம்மா பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், ஜெயலலிதா அம்மாவிற்கு பொய் சொன்னாலே பிடிக்காது. சட்டென்று அவருக்கு கோபம் வந்துவிடும். உண்மையில் ஜெயலலிதா அம்மாவிற்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவர்களுக்கு உணவு என்றால் அவ்வளவு இஷ்டம். அவரைப் போல நம்மால் ருசித்து ரசித்து சாப்பிட முடியாது. என்னுடைய அம்மாவை விட ஜெயலலிதா அம்மாவை தான் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் 17 வயதிலேயே நடிக்க வந்து விட்டேன். சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தேன். ஆனால் 2008 ஆம் ஆண்டு என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவு வந்தது.
என் வாழ்க்கையின் மிகவும் கருப்பான பக்கம் என்று தான் அதை சொல்ல வேண்டும். எனக்கு அப்போது சினிமா வாய்ப்புகள் இல்லை. நான் மிகவும் குண்டாகி விட்டேன். நானும் கதாநாயகி தவிர்த்து வேறு கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று இருந்த காரணத்தால் யாரும் என்னை வந்து அணுகவில்லை. 17 வயதிலேயே நடிக்க வந்ததால் படிப்பும் பெரிதாக இல்லை. அப்படி இருந்தபோது இனிமேல் என்ன செய்யப் போகிறேன் என்ற ரீதியில் கேள்விகள் எழுந்தது. 2006 ஆம் ஆண்டு நான் அரசியலில் வந்திருந்தாலும் நான் பெரிதாக பிரபலமாகவில்லை. 2009 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு என்னை ஜெயலலிதா அம்மா போக சொன்னாங்க.
நான் போகவில்லை என்று கூறியதும் மக்களை பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும் சென்று வா என்று கூறினார்கள். பிறகு தமிழை நன்றாக கற்றுக்கொண்டு 2011 ஆம் ஆண்டு ஊர் ஊராகச் சென்று நான் பிரச்சாரம் செய்தேன். அம்மா என்னை எல்லா இடத்திற்கும் அனுப்பி அவரின் மகளாகவே பாவித்தார். நான் பிரச்சாரத்திற்கு செல்லும் போது எனக்காக போலீஸ் பாதுகாப்பு நியமித்தார். என்னை அந்த அளவிற்கு அவர் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார். நான் சறுக்கி விழுந்த சமயத்தில் என்னுடன் துணையாக நின்றவர் அவர்தான். இதனால்தான் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று விந்தியா கூறியுள்ளார்.
மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ருசி ஆனந்த், தனது துறையின் கலாச்சார…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தர்மபுரி பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.…
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ராக்மார்ட் பகுதியில் ஹன்னா இஸ்ரேல் என்பவரது குடும்பத்தினர் 'ஹீ-ஹா' என்ற குட்டி ஆண் கழுதையைத்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் இடநெருக்கடி காரணமாகப் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பெற்றோர் மருத்துவமனைக்கு…
மும்பை அருகே உள்ள மீரா பயந்தர் மாநகராட்சி , குறிப்பிட்ட 20 இடங்களைத் தவிர்த்துப் பிற பொது இடங்களில் தெரு…
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,050 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம்…