Connect with us

கல்யாணம் எப்ப பண்ண போறீங்க…? காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை விமலா ராமன்…

CINEMA

கல்யாணம் எப்ப பண்ண போறீங்க…? காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை விமலா ராமன்…

 

ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த, தமிழகத்தைச் சேர்ந்த நடிகை விமலா ராமன் 2004 ஆம் ஆண்டு ‘மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா’ பட்டத்தை கைப்பற்றியவர். பின்னர் மாடலிங் கவனம் செலுத்தி வந்த இவர், திரைப்பட வாய்ப்புகளையும் தேட துவங்கினார். அந்த வகையில், கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய பொய் என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை விமலா ராமன்.

   

இந்த படத்தை தொடர்ந்து மலையாள திரை உலகில் நுழைந்தார். மலையாளத்தில் இவர் நடித்த டைம், சூரியன், நஸ்ராணி, ரோமியோ போன்ற படங்கள் அடுத்தடுத்து நல்ல வரவேற்பை பெற்றதால், பிஸியான நடிகையாக மாறினார் விமலா ராமன். இவர் தமிழில் ‘பொய்’ படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிறந்த அறிமுகத்தை கொடுத்தது என்றால் அது இயக்குனர் சேரன் நடித்து வெளியான ராமன் தேடிய சீதை திரைப்படம் தான்.

தமிழ், மலையாளத்தை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த ஒரு வருடமாகவே பிரபல நடிகர் வினய் மற்றும் விமலா ராமன் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இது குறித்து இருவருமே வாய் திறக்காமல் இருந்தனர். தற்போது இவர்கள் தங்களது காதலை உறுதிப்படுத்தும் விதமாக அவ்வப்பொழுது இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்பொழுது தனது காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி நடிகை விமலா ராமன் வெளியிட்ட பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இப்பதிவினை பார்த்த ரசிகர்கள் ‘கல்யாணம் எப்ப பண்ண போறீங்க…?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Vimala Raman (@vimraman)

Continue Reading
To Top