தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை விஜயலக்ஷ்மி. இவர் ‘சென்னை 600028’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இத்திரைப்படத்தை தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், பிரியாணி போன்ற பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
‘அதே நேரம் அதே இடம்’ திரைப்படத்தில் இவர் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவர் அகத்தியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்து வந்த இவர், சென்னை 600028 இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.
தற்பொழுது மீண்டும் சினிமாவில் களமிறங்கி பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் நடிகை விஜயலட்சுமி. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தனது திறமையை வெளிப்படுத்தி சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் விஜயலட்சுமி. இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கனி மற்றும் நிரஞ்சனி என இரண்டு சகோதரிகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் தனது சகோதரிகளுடன் இணைந்து பைக்குகளை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘உங்ககிட்ட இவ்ளோ bike collections இருக்கா…?’ என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கீழே கிடந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான…
பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…
வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…
தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…