நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு போலீசில் புகார் அளித்திருந்தார். சென்னை வளசரவாக்கம் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி திடீரென வாபஸ் பெற்றார். இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 736 வது பிரிவின் படி வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வலக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்தது. பிறகு வழக்கு விசாரணையை தீவிர படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நேற்று காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் நேற்று நேரில் ஆஜராகாத நிலையில் அவருடைய வழக்கறிஞர்கள் ஆஜராகினர். பிறகு சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டிய நிலையில் சீமானின் ஆதரவாளர் ஒருவர் அதனை கிழித்தெறிந்தார்.
இது தொடர்பாக போலீசார் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதம் கைகளப்பாக மாறியது. இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், என்னை ஏமாற்றாதீங்க, என்னுடைய பாவத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள் சீமான் என கடுமையாக விமர்சித்துள்ளார். முதலில் என்னை யார் என்றே தெரியாது என சீமான் கூறினார். பிறகு 2023 ல் பேச்சுவார்த்தைக்கு வந்த போது பேசியபடி மாதம் 50 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்தார். முதலில் காங்கிரஸ் அழைத்து வந்ததாகவும் பிறகு பாஜக அழைத்து வந்ததாகவும் கூறிய சீமான் தற்போது திமுக என்னை அழைத்து வந்ததாக கூறுகிறார்.
இந்த பொன்னான வாயால தான் என்ன பொண்டாட்டி பொண்டாட்டி என்று கூப்பிட்டீங்க. அப்புறம் என்கிட்ட வீடியோவும் கேட்டீங்க. இப்போ என்ன திமுக தான் என்ன அழைச்சிட்டு வந்தீங்கன்னு சொல்றீங்க. இரண்டு நாளைக்கு முன்னாடி கூட பேச்சுவார்த்தைக்கு ஆள் அனுப்பிட்டு அப்போ பிரஸ்மீட்டில் என்னை பத்தி பேசினீங்க. என்னோட பாவம் சும்மா விடாது. இன்னும் என்னெல்லாம் பண்ணப்போகுதுன்னு பாருங்க என விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.
Press meetல் மட்டுமே வீரத்தை காட்டும் மைக் புலிகேசி சீமானுக்கு..
நேரடியாக சவால் விட்ட விஜயலக்ஷ்மி .. @Seeman4TN #Vijayalakshmi @_ITWingNTK pic.twitter.com/A4V9Hqq2MK
— Thavam (@ThavamOfficial) February 27, 2025