விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று ‘பாரதி கண்ணம்மா’. இந்த சீரியல் ஆரம்பித்த நாட்களில் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் ஓடிக்கொண்டிருந்தது. இந்த சீரியலில் அருண் மற்றும் ரோஷினி ஹீரோ ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்தனர்.
இதனைதொடர்ந்து 1000ன் எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது இதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோவாக சிப்பு சூரியனும், ஹீரோயினாக வினுஷாவும் நடித்து வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் பாகத்தில் கண்ணம்மாவின் பாட்டியாக வில்லியாக நடித்தவர் பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி. இவரின் நடிப்பு இந்த சீரியலில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இவர் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்கலில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா என பல ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது 70 வயதை எட்டியுள்ள இவர் இன்று அதிகாலை தூக்கத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தற்போது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் சரத்குமார் தென் மாவட்டங்களில் உள்ள தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய…
தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை தொடர்பான சட்டப் போராட்டம் தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. இத்திரைப்படத்திற்கு…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக,…
தமிழக அரசியலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எடுக்கப்போகும் அடுத்தகட்ட நகர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான கதவுகள்…
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாசக்கார தந்தையின் நெகிழ்ச்சியூட்டும் செயல், இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வம்பன் அருகேயுள்ள கொத்தக்கோட்டை கிராமத்தைச்…