Categories: சினிமா

தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்த அம்மாக்களை கொண்டாடிய 6 திரைப்படங்கள்… ‘அம்மான்னா சும்மா இல்லடா அவ இல்லனா யாரும் இல்லடா’…

Spread the love

சினிமா திரையுலகில் அம்மா சென்டிமென்ட் திரைப்படங்களுக்கு ஒரு தனி சிறப்பு உள்ளது. எத்தனை விதமான கதைக்களத்தில் திரைப்படங்களை எடுத்தாலும் அது அம்மா சென்டிமென்ட் போலிருக்காது. அந்த திரைக்கதைக்கு ஒரு தனி சக்தியும் ஒரு பலமும் உண்டு என்றே கூறலாம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்த அம்மாக்களை பெருமைப்படுத்தும் வகையில் வெளிவந்த குறிப்பிட்ட ஆறு திரைப்படங்களைப் பற்றி இத்தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

அம்மா கணக்கு:

நடிகை அமலா பால் நடிப்பில் வெளிவந்த ஹிட் திரைப்படம் அம்மா கணக்கு. இத்திரைப்படம் 2016 இல் வெளிவந்தது. இளம் விதவை தாயாக நடித்திருக்கும் அமலா பாலின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்கப்பட்டது. தன் மகளுக்கு வழிகாட்டியாக இருக்கும் வகையில் நடிகை அமலா பாலும் பள்ளிக்கு சென்று படிப்பார். ஒரு சிறந்த அம்மா தன் மகளுக்கு எப்படி எல்லாம் வழி காட்ட வேண்டும் என்பதை அமலா பால் திரைப்படத்தில் மிக தத்ரூபமாக நடித்து காட்டியிருப்பார்.

பிச்சைக்காரன்:

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்து 2016 இல் வந்த சூப்பர் ஹிட் திரைப்படம் பிச்சைக்காரன். இத்திரைப்படத்தில் தன் அம்மாவை காப்பாற்றுவதற்காக கோடீஸ்வரனாக இருக்கும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரனாக ஒரு மண்டலம் பிச்சை எடுப்பார். இத்திரைப்படம் முழுவதும் அம்மா சென்டிமென்ட் கொண்டிருக்கும். இத்திரைப்படத்தில் வரும் நூறு சாமிகள் வந்தாலும் அம்மா உன்னை போல் ஆகிடுமா என்ற பாடல் இப்பொழுது கேட்டாலும் ரசிகர்களின் மனதை கண்டிப்பாக கலங்க வைக்கும்.

36 வயதினிலே:

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்த நடிகை ஜோதிகாவின் சூப்பர் ரீ என்ட்ரி திரைப்படம் 36 வயதினிலே. இத்திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு மாஸாக ஒரு என்ட்ரி கொடுத்தார் ஜோதிகா. 2015 இல் வெளியான இத்திரைப்படத்தில் வசந்தி எனும் கதாபாத்திரத்தில் தன் குடும்பத்திற்காகவே வாழும் பெண்ணாக நடித்து அசத்தினர். தன்னை விட்டு பிரியும் மகள் மற்றும் கணவனால் வருத்தப்படும் இவர் அவர்களை பெருமைப்படுத்துவதற்காக முயற்சி எடுத்து அந்த முயற்சியில் வெற்றியும் காணுவார்.

கன்னத்தில் முத்தமிட்டால்:

2002ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் ,சிம்ரன் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால். இத்திரைப்படத்தில் நடிகை சிம்ரன் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருப்பார். அதில் அவரின் முதல் குழந்தையாக வரும் கீர்த்தனா தத்துக் குழந்தையாக இருப்பார். அதை வைத்து தான் இத்திரைப்படத்தின் கதையை நகரும். நடிகை சிம்ரன் இத்திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

ராம் :

2005 இல் இயக்குனர் அமீர் இயக்கி நடிகர் ஜீவா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ராம். திரைப்படத்தில் நடிகர் ஜீவாவின் அம்மாவாக சரண்யாவின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இத்திரைப்படத்தில் வரும் ஆராரிராரோ என்ற பாடல் தற்பொழுதும் பலரின் செல்போன்களில் ரிங்டோனாக இருப்பதை நாம் பார்க்க முடியும்.

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி:

2004 இல் நடிகர் ஜெயம் ரவி, நதியா, அசின் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதிலும் குறிப்பாக ஜெயம் ரவியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நதியாவின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது என்றே கூறலாம். இவர் தன் மகன் மேல் உயிரையே வைத்திருப்பார். ஒரு கட்டத்தில் அவருடைய இறப்பு அதனால அவர் மகன் படும் துன்பம் பற்றி இத்திரைப்படம் கூறி மனதை கலங்கடித்தது. இப்படி பல ஹிட் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அம்மா சென்டிமென்டில் எடுக்கப்பட்டுள்ளது.

Begam

Recent Posts

“2017 கூவத்தூர் டூ 2026 பூரணாங்குப்பம்”… விஜய்க்கு 10 சீட்.. சி.வி.சண்முகத்திற்கு டெப்யூட்டி சிஎம்?.. நள்ளிரவில் கசிந்த ரகசிய டீல்..!

தமிழக அரசியலில் 2017-ம் ஆண்டு அரங்கேறிய கூவத்தூர் அதிரடிச் சம்பவங்கள், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது புதுச்சேரி பூரணாங்குப்பம்…

7 minutes ago

“சொன்னதைச் செய்யும் கேது பகவான்… இந்த டாப் 3 ராசிகளுக்கு அடித்தது மெகா ஜாக்பாட்… இனி ராஜயோகம் தான்.. இதில் உங்க ராசி இருக்கானு பாருங்க”…!!!

2026-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சி, ஜோதிட ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி,…

7 minutes ago

அதிர்ச்சி! விஜய்க்கு கான்வாய் வாகன பாதுகாப்பு திடீர் வாபஸ்.. நீலாங்கரை இல்லத்தில் பேரிகார்டுகள் அகற்றம்.. பின்னணி என்ன..?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு கடந்த மூன்று நாட்களாக வழங்கப்பட்டு வந்த கான்வாய் வாகனங்கள் (பாதுகாப்பு வாகனங்கள்) திரும்பப்…

12 minutes ago

“சண்டைக்காரன் காலில் விழுந்த ஸ்டாலின்?”… எடப்பாடி எடுத்த அந்த ஒரு முடிவு… விஜய்யை வீழ்த்த இப்படி ஒரு திட்டமா?…. கசிந்த திடுக்கிடும் தகவல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், அரை நூற்றாண்டு கால அரசியலை தலைகீழாக மாற்றியுள்ளன. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108…

13 minutes ago

“நீங்க தாராளமா ஆட்சி அமைக்கலாம், ஆனா”… ஸ்டாலின் போட்ட 2 கண்டிஷன்…. ஆடிப்போன விஜய்…. பரபரக்கும் அறிக்கை….!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அக்கட்சியின்…

20 minutes ago

நடிகர் ஜீவாவைக் கட்டிப்பிடித்து கதறி அழுத விஜய்… ஆர்.பி. சௌத்ரி இறுதிச்சடங்கில் சோகம்.. வைரலாகும் வீடியோ..!!

மறைந்த பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் உடல், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகின் முக்கியத்…

21 minutes ago