Connect with us

சில்க் ஸ்மிதாவின் பெயரை இன்னொரு நடிகைக்கு வைத்த கங்கை அமரன்… அவரைப் போலவே தற்கொலை செய்துகொண்ட சோகம்!

CINEMA

சில்க் ஸ்மிதாவின் பெயரை இன்னொரு நடிகைக்கு வைத்த கங்கை அமரன்… அவரைப் போலவே தற்கொலை செய்துகொண்ட சோகம்!

 

தமிழ் சினிமாவில் கதாநாயக, கதாநாயகிகளுக்கு என்று ஒரு ரசிகப் பெரும்கூட்டம் இருப்பது கவர்ச்சி நடிகைகளுக்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வரிசையில் முக்கிய இடம் பிடித்தவர் சில்க் ஸ்மிதா. அவர் தான் நடித்த பெரும்பாலான படங்களில் கவர்ச்சி வேடங்களையே தேடி தேடி நடித்தார் என்றாலும், அவரிடம் ஒரு தனித்துவம் இருந்தது. இதனால் தென்னிந்தியா முழுவதும் அவருக்கு படங்களுக்கு வரவேற்பு இருந்தது.

ஆனாலும் அவர் தன்னுடைய 35 ஆவது வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இன்றுவரையும் அவரின் மரணத்துக்கான காரணம் மிகவும் மர்மமாகவே உள்ளது. அப்படி இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து 27 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு நடிகை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் என்றால் அது நடிகை சில்க் ஸ்மிதா மட்டும்தான்.  சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரின் வாழ்க்கையை தழுவி தி டர்ட்டி பிக்சர் எனும் திரைப்படம் இந்தியில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.

   

இந்நிலையில் கோழி கூவுது என்ற படத்தில் சில்க் ஸ்மிதா கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் பிரபு கதாநாயகனாக நடிக்க கங்கை அமரன் இயக்கினார். அந்த படத்தில் அறிமுகமான மற்றொரு நடிகைக்கு சில்க் ஸ்மிதாவின் ஒரிஜினல் பெயரான விஜயலட்சுமி என்பதை சுருக்கி விஜி என்று பெயர் வைத்துள்ளார் கங்கை அமரன்.

அவரும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நிலையில் 1990 களில் அப்போல்லோ மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனால் அவருக்கு அந்த சிகிச்சையால் பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் மருத்துவமனையின் மீது இழப்பீடு வழக்கு போட்டு வென்றார். மற்றொரு அறுவை சிகிச்சையில் அவருக்கு உடல்நலம் சீரான நிலையில் 2000 ஆம் ஆண்டு அவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

அவரது தற்கொலைக்குக் காரணம் இயக்குனர் ஏ ஆர் ரமேஷோடு அவருக்கு இருந்த காதல்தான் என்று தற்கொலை கடிதத்தில் எழுதியிருந்தார். இயக்குனர் ரமேஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top