“அவர் மேல எனக்கு ரொம்ப மரியாத.. ஆனா“… கவுண்டமணியின் மறுபக்கத்தை பகிர்ந்த பிக் பாஸ் விசித்ரா..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.

அதன் பின்னர் 80 களிலும் 90 களிலும் அவர் முக்கிய நகைச்சுவை நடிகராக கோலோச்சினார். பல படங்களில் கதாநாயகர்களுக்கு இணையான சம்பளத்தைப் பெற்றார். இவருடன் நடித்த பல நடிகர்கள் முன்னணி நகைச்சுவை நடிகைகளாகினர். பெண் நடிகைகளில் ஷகீலா, விசித்ரா மற்றும் ஷாமிலி ஆகியோரும் கவுண்டமணியோடு நடித்து அதன் பின்னர்தான் பிரபலமானார்கள்.

   

இந்நிலையில் கவுண்டமணியோடு தனக்கு நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி விசித்ரா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “நான் நடிகர் கவுண்டமணியோடு பல படங்களில் நடித்திருக்கிறேன். பெரிய குடும்பம் திரைப்படத்தில் நடிக்க இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் எனக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். அந்த படத்தின் பூஜையிலும் நான் பங்கேற்றிருந்தேன்.

அப்போது கே.எஸ்.ரவிக்குமார் சார் என்னிடம் வந்து கவுண்டமணி சாருக்கு ஒரு வணக்கம் சொல்லுங்கள் என்று கூறினார். நான் எதற்காக என்று கேட்டபோது, இல்ல நீ வந்து ஒரு வணக்கம் மட்டும் சொல்லிடேன் என்று சொல்லி அழைத்து சென்றார். நம்ம ஒரு கேரக்டருக்கு பிக்ஸ் ஆகிட்டோம். இனிமேல் நடிக்க போகிறோம். இதுக்கும் வணக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியவில்லை.

அவரோடு சென்று வணக்கம் சொன்னேன். அதற்கு கவுண்டமணி சார் இப்போதான் வணக்கம் சொல்வீங்களா எனக் கோபமாக கேட்டார். அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார் என்று தெரியவில்லை. அவர் மேல் நான் மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால் சினிமாவில் இப்படியெல்லாம் நடப்பது சகஜம்தான் என நினைத்துக் கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.