இந்த மாதிரி கொடுமை யாருக்கும் நடக்க கூடாது.. ஜூனியர் NTR ரசிகர்களால் கொந்தளித்த நடிகை வேதிகா..!!

By Priya Ram on அக்டோபர் 1, 2024

Spread the love

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் தேவாரம் திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீசானது. இந்த படத்தில் ஜான்விகபூர், அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தேவாரா' படம் பார்த்த ரசிகர்கள் தியேட்டரிலேயே மரணம்.. என்ன காரணம்? - தமிழ்  News - IndiaGlitz.com

   

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் இன் படம் ரிலீஸ் ஆவதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். அதன் ஒரு பகுதியாக தியேட்டர் முன்பு ரசிகர்கள் ஆட்டினை வெட்டி பலி கொடுத்து அந்த ரத்தத்தை போஸ்டரில் தெளித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதற்கு சோசியல் மீடியாவில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

   

Devara Movie Day 1 Collection: படம் சுமாறுதான்... ஆனால் பிக் ஓப்பனிங் கண்ட ' தேவாரா'! முதல் நாள் வசூல் விவரம்!

 

இந்த நிலையில் பிரபல நடிகையான வேதிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இது மிகவும் கொடியது. அந்த பாவப்பட்ட குழந்தைக்காக எனது இதயம் ரத்தம் வடிகிறது. அதிகப்படியான சித்திரவதை கொடுமை.. யாருக்குமே இந்த நிலைமை. இதுபோன்று நடக்கக்கூடாது. உலகத்தில் குரலற்று அப்பாவியாக இருக்கும் ஜீவனை வதைக்க எப்படி முடிகிறது.

வேற லெவல் கவர்ச்சியில் நடிகை வேதிகா.. வர்ணிக்கும் இளசுகள்

அந்த அப்பாவியான குழந்தையை நான் அம்மாவுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். கடவுளின் கைகளில் தஞ்சம் அடையட்டும். உன்னை காப்பாற்றாத எங்களை மன்னித்துவிடு. ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் இனிமேல் எந்த உயிரையும் கொல்ல கூடாது. யாருமே இந்த வன்முறையை ஆதரிக்கப் போவதில்லை. இதனால் இதை இதோடு தயவு செய்து நிறுத்துங்கள் என பதிவிட்டுள்ளார்.

author avatar
Priya Ram