பாத்துகிட்டே இருக்கலாம் போல.. சைடு போஸில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை வேதிகா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..

By Mahalakshmi

Updated on:

நடிகர் அர்ஜூன் இயக்கத்தில் அவரே  நடித்த திரைப்படம்  “மதராஸி”. இத்திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானார் நடிகை வேதிகா.  தற்போது நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

   

மேலும், டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘முனி’ படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து,  சிம்பு நடித்த ‘காளை’ படத்திலும் நடித்திருந்தார். நல்ல அழகு இருந்தும் சரியான வாய்ப்பு தமிழ் சினிமாவில் கிடைக்காத கதாநாயகிகளில் வேதிகாவும் ஒருவர். மேலும் இவர் சில கன்னட, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் பாலா இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ படத்தில் இவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது.

தமிழில் வாய்புகள் இல்லாததால் கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். இவர் சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் தமிழ் திரைப்படத்தில் காஞ்சனா 3, காவியத்தலைவன் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.  நடிகை வேதிகா சினிமாவுக்கு வந்து 12 வருடங்கள் கடந்த நிலையில் இப்போது வினோதன் மற்றும் ஜங்கிள் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்ற  தகவல் வெளியானது.

நடிகை வேதிகா தனது  கட்டழகை இன்னும் ஸ்லிம்மாகவே மெயிண்டெய்ன் செய்து வருகிறார். அவ்வப்போது வெளிநாடுகள் மற்றும் மாலத்தீவு போன்று சுற்றுலாத்தளங்களுக்கு சென்று அங்கு கவர்ச்சி  உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், வேதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி  ரசிகர்களை அல்லுவிட வைத்துள்ளது.

author avatar
Mahalakshmi