குறும்படத்தில் நடிப்பதற்காக ரூ.5 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதுடன், அதைத் திரும்பக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்த புகாரில் பிக்பாஸ் புகழ் பிரபல நடிகை வர்ஷினி வெங்கட்டை கிண்டி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ‘லாரா’, ‘சுருதி’, ‘சொட்ட சொட்ட நனையுது’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வர்ஷினி, தருண் என்ற இளைஞரிடம் குறும்படத்தில் நடிப்பதாகக் கூறி ரூ.5 லட்சம் வாங்கிய நிலையில், கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது அவரை ஒரு விடுதி அறைக்கு வரவழைத்து மேலும் ரூ.27 லட்சம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட தருண் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய கிண்டி போலீசார், பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வர்ஷினி வெங்கட்டைக் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
