நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி. இந்த தம்பதியின் மூத்த மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். அவர் போடா போடி சர்கார் சண்டக்கோழி 2 தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். கடந்தாண்டில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை வரலட்சுமி காதல் திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது, தாய்மை என்பது பெரிய விஷயம்தான். ஆனால் ஒரு குழந்தையை பெற்றால்தான் தாய் என்பது இல்லை. எனக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பமில்லை. ஒருவேளை இந்த முடிவு எதிர்காலத்தில் மாறலாம். நான் என் தங்கைக்கு தாய்க்கு தாயாக இருக்கிறேன்.
என்னை சுற்றியுள்ளவர்களை நான் நன்றாக பார்த்துக் கொள்கிறேன். அதுதான் என்னை பொருத்தவரை தாய்மை. ஒரு பெண் பெற்றுக்கொள்ள கூடாது என்று முடிவெடுப்பதே பேரண்டிங்கில் சிறந்த முடிவுதான் என்று அந்த நேர்காணலில் நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
