தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சரத்குமார். இவரின் மகள் என்ற அடையாளத்தோடு வாரிசு நடிகையாக களமிறங்கியவர் நடிகை வரலக்ஷ்மி. இவர் திரையுலகில் ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷாலுடன் இணைந்து ‘சண்டக்கோழி’, விஜயுடன் இணைந்து ‘சர்கார்’, சசிகுமார் உடன் இணைந்து ‘தாரை தப்பட்டை’ போன்றவர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இதை தொடர்ந்து விக்ரம் வேதா, நிபுணன் என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் கூட தெலுங்கில் வெளியான ‘ஹனுமேன்’ படத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார். தற்போது தமிழில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ‘ரயான்’ படத்தில் நடித்து வருகிறார். இது தவிர வேறு சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் திடீரென தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். நடிகை வரலட்சுமிக்கும், மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் நிகோலாய் சச்தேவுக்கும் மார்ச் 1ஆம் தேதி மும்பையில் இரு வீட்டாரின் பெற்றோர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவியது.

விரைவில் அவர்களின் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர். இவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் நபர் பற்றிய தகவல்கள் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதன்படி வரலட்சுமியின் வருங்கால கணவர் நிக்கோலாய் சச்தேவ் ஒரு Gallerist. கேலரி 7 என்ற பெயரில் கலைக்கூடம் ஒன்றை நடத்தி வருகிறார் எனக் கூறப்படுகிறது.
