விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. 60 நாட்களைக் கடந்த இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட இவர், சிறு பிள்ளை தானே எவ்வளவு நாள் தாக்குப் படிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் எண்ணிய நிலையில், 18 வயது கூட நிறைவடையாத ஜோவிகா தனது சிறப்பான விளையாட்டை ஆரம்பித்த ஒரு சில வாரங்களில் வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் போகப் போக மாயா மற்றும் பூர்ணிமா உடன் இணைந்து, இவர் செய்த செயல்கள் ரசிகர்களின் கோபத்தை அதிகரித்தது.மேலும் பிரதீப் விஷயத்தில் இவர் நடந்து கொண்டது ரசிகர்களை மேலும் கடுப்பாக்கியது.
இந்நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஜோவிகா, கடிதம் ஒன்றை எழுதி அதனை பதிவு செய்துள்ளார். அதில் ‘என்னை அன்போடு அரவணைத்து, உற்சாகப்படுத்தி, பாராட்டி, என்னை ஒரு சொந்தம் போல பார்த்துக்கொண்ட ஒவ்வொருவருக்கும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் இந்த பயணத்தில் நான் எவ்வளவு தூரம் பயணத்திற்கு முடியாது. என்னை இறுதிப் போட்டி வரை செல்வேன் என்று என்னை வழி நடத்துபவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நான் உண்மையாகவே வீட்டிற்கு சென்று என் அம்மாவுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனக்கு எல்லாமே அவர்தான் அவரை பார்த்துக் கொள்வதோடு அவரை பாதுகாப்பதும் என்னுடைய கடமையாகும். கடந்த வாரம் முதலே நான் எவ்வளவு சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் செல்ல வேண்டும் என்று உறுதியாக நம்பினேன். இந்த பயணத்தின் மூலம் நிறைய நினைவுகளையும் நான் கற்றுக்கொண்ட விஷயங்களையும் எடுத்துக் கொண்டு செல்கிறேன். உள்ளே இருக்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
சிறந்த போட்டியாளர் வெற்றி பெறட்டும். நான் எதிர்பார்ப்பது ஒன்றும் இல்லை. நான் இந்த பயணத்தில் செய்த சரி, தவறு ஆகியவற்றை ஒப்புக்கொள்கிறேன். டிஸ்னி ஹாட்ஸ்டார் சேனலுக்கும், மேலும் இதற்கு பின்னால் கடினமாக உழைக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய உண்மையான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் எது நடந்திருக்காது. இனிவரும் நாட்களில் நான் செய்யும் வேலைகள் மூலமாக உங்கள் மனதில் எப்போதும் நிறைந்திருப்பேன் என்று நம்புகிறேன். தடை அலைகளை தாண்டி தொடர்ந்து நீந்தி கொண்டே இருங்கள். ஜோவிகா விஜயகுமார்’ என்று உருக்கமுடன் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு…
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…