தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரித்திகா சிங். இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் படத்தில் மட்டுமல்லாமல் ரியலாகவும் குத்துச்சண்டை வீராங்கனை தான்.
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை மற்றும் ராகவா லாரன்ஸின் சிவலிங்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் ரித்திகா சிங் நடித்தார்.
அந்தத் திரைப்படங்கள் அவ்வளவு அதிக வெற்றியை பெறாத காரணத்தால் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து அவர் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் 170வது படத்தில் இரு முக்கிய ரோலில் நடிக்கிறார். மறுபக்கம் பாலிவுட் திரைப்படங்களிலும் களமிறங்கி கலக்கி வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை ரித்திகா.
இவர் தற்போது கையில் ரத்த காயங்கள் உடன் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை எச்சரித்து கொண்டே இருந்தார்கள். கண்ணாடி இருக்கிறது என சொன்னார்கள். ஆனால் இது எல்லாம் நடப்பது தான். சில நேரங்களில் momentum கண்ட்ரோல் செய்ய முடியாது தானே.’ நான் கண்ட்ரோல் இழந்ததால் இப்படி நடந்துவிட்டது’ என ரித்திகா கூறி பதிவு வெளியிட்டுள்ளார். இது அந்த பதிவு…
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…