என்ன டிரஸ் இது..? வித்தியாசமான உடையில் வந்த வனிதாவை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்.. வைரலாகும் போட்டோஸ்..

By Priya Ram

Updated on:

நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள் வனிதா தளபதி விஜயுடன் சந்திரலேகா படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் இடம்பெற்ற அல்லாஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் என்ற பாடல் ஹிட்டானது. அதன் பிறகு சில திரைப்படங்களில் வனிதா கதாநாயகியாக நடித்தார்.

   

பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக வனிதா தனது கணவரை பிரிந்து விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் வனிதா மீண்டும் பிரபலமானார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வனிதாவை யாரும் இதுவரை கண்டு கொள்வதில்லை.

தற்போது தனது இரண்டு மகளுடன் வனிதா தனியாகத்தான் வசித்து வருகிறார். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக கலந்து கொண்டார். தற்போது ஹீரோயின் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஜோவிகாவும் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுகிறார்.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வனிதா வித்தியாசமான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார். அதனை பார்த்து நெட்டிசன்கள் ஹோட்டலுக்கு என்ன சர்வராக போறீங்களா? என்ன டிரஸ் இது? என கமெண்ட்சில் கலாய்கின்றனர்.

author avatar
Priya Ram