அழகாலே அள்ளுறியே… சிரிப்பாலே கொல்லுறியே… ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை வாணிபோஜனின் லேட்டஸ்ட் வீடியோ..

By Begam on ஐப்பசி 31, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை வாணி போஜன். இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து இவரை ரசிகர்கள் ‘சின்னத்திரை நயன்தாரா’ என்றும் அழைத்து வருகின்றனர். இவர் 2020இல் வெளியான  ‘ஓ மை கடவுளே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

   

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகை வாணி போஜனுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தற்பொழுது இவர் பகைவனுக்கு அருள்வாய், பாயும் புலி நீ எனக்கு, ஊர்க்குருவி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதை தவிர பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை வாணி போஜன்.

   

 

சமீபத்தில் இவர் நடிகர் ஜெய் உடன் ஜோடி சேர்ந்த நடித்து வந்த நிலையில், அவருடன் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி வைரலானது. ஆனால் இதற்கு உடனே மறுப்பு தெரிவித்தார் நடிகை வாணி போஜன். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை வாணி போஜன்.

இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் தனது சிரிப்பால் ரசிகர்களை மயக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்ய ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)