தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பு மற்றும் நகைச்சுவையால் எக்கச்சக்கமான ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இன்றும் இறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஊர்வசி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளில் டாப் நடிகர்களுடன் அவர்களுடைய நடிப்புக்கு ஈடு கொடுத்து தனது அசாத்திய நடிப்பால் அசத்தியவர். தமிழில் பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற திரைப்படம் மூலம் தான் கதாநாயகியாக சினிமா உலகிற்குள் நுழைந்தார். கவிதா ரஞ்சனி என்ற இயற்பெயர் கொண்ட இவர் சினிமாவுக்காக தன்னுடைய பெயரை ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார்.
பல சூப்பர் ஹீரோக்களுடன் நடித்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஊர்வசி கேரளா நடிகர் மனோஜ் ஜெயின் என்பவரை 2000 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேஜலக்ஷ்மி என்ற மகளும் உள்ளார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். மகள் தேஜலக்ஷ்மி தந்தை மனோஜுடன் வாழ்ந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு சிவ பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஊர்வசி 43 வயதில் மகளுக்கு தாயானார். தற்போதும் ஊர்வசி பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில், தனது மகள் சினிமா துறையில் விரைவில் கால்பதிக்கவுள்ளதாகவும் தற்போது படத்தில் நடிப்பதற்காக தனது மகள் கதை கேட்டு வருவதாகவும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை ஊர்வசி கூறியிருந்தார். இந்நிலையில் ஊர்வசி சமீபத்தில் தனது மகள் தேஜாலட்சுமியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஊர்வசி மகளா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…