இறந்த தன் முதல் மனைவி மற்றும் பெற்றோருக்காக மதுரை முத்து செய்த நெகிழ்ச்சியான செயல்.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரை வரை பிரபலமானவர்தான் நடிகர் மதுரை முத்து.விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமாகி, பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் பலர். அவர்களில் ஒருவர் தான் மதுரை முத்து. ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மதுரை தமிழில் எதார்த்தமான கவுண்டர்களை போட்டு இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மதுரை முத்து இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அசத்தப்போவது யாரு, சண்டே காமெடி, போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.  கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை செய்து மக்களை மகிழ்வித்து வருகின்றார்.

இவருடைய காமெடிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கடி ஜோக்கை சொல்லிவிட்டு அதனை சமாளிப்பதற்கு இவர் சொல்லக்கூடிய நகைச்சுவை தான் அல்டிமேட் ஆக இருக்கும். நகைச்சுவையில் கொடி கட்டி பறக்கும் கலைஞர்களில் ஒருவரான மதுரை முத்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு பத்தாவது சீசனில் நடுவராக உள்ளார்.  அதேசமயம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உலகின் பல பகுதிகளிலும் பட்டிமன்ற நடுவராகவும் நகைச்சுவை பேச்சாளராகவும் உள்ளார். திருமணங்கள் மற்றும் பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகளிலும் இவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வருகிறார்.

இவர் எவ்வளவு பிசியாக இருந்தாலும் அடிக்கடி தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று உறவினர்களை சந்தித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மதுரை முத்து லோகா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தனர். குழந்தை மற்றும்  குடும்பம் என மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவருடைய வாழ்க்கையை அடியோடு திருப்பி போட்டது 2016 ஆம் ஆண்டு நடந்த விபத்து. மதுரை முத்துவின் சொந்த ஊரான அரசம்பட்டிக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருக்கும்போது இவருடைய மனைவி லோகா வந்த கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே லோகா உயிரிழந்தார்.

இதன் பிறகு 2 வருடங்கள் கழித்து தன்னுடைய மனைவியின் தோழி நீத்து என்கிற பல் மருத்துவரை மதுரை முத்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். நீத்துவுக்கு 5 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இப்படியான நிலையில் மதுரை முத்து சமீபத்தில் தன் முதல் மனைவிக்காகவும் தன் பெற்றோர்களின் நினைவாகவும் தனது சொந்த ஊரில் நிலம் வாங்கி கோவிலை கட்டி வருவதாக கூறியிருந்த நிலையில் தற்போது அந்த கோவிலை கட்டி முடித்துள்ளார். தற்போது அது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

2 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

2 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

2 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

3 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

3 மணத்தியாலங்கள் ago