Categories: சினிமா

விஜயின் 10 படங்களுக்கு நோ சொன்ன ஹாரிஸ் ஜெயராஜ்.. அவரே சொன்ன காரணத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!

Spread the love

தமிழ் சினிமாவில் உலகத் தரம் வாய்ந்த ஸ்டூடியோ வைத்துள்ள இசை அமைப்பாளர் என்றால் அது ஹாரிஸ் ஜெயராஜ் என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய இசை மற்ற இசை அமைப்பாளர்களை விட வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் தனித்துவமாக இருப்பதால் என்னவோ அவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவரை ரசிகர்கள் அனைவரும் ஹாரிஸ் மாம்ஸ் என அழைக்கிறார்கள். கடந்த 2001 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனராக அறிமுகமான மின்னலே திரைப்படம் மூலமாகத்தான் ஆரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பாளராக அறிமுகமானார்.

அந்த காலகட்டத்தில் ஏற்கனவே ஏ ஆர் ரகுமான், தேவா மற்றும் யுவன் சங்கர் ராஜா என பலரும் ஜாம்பவான்களாக உயர்ந்து நின்று கொண்டிருக்கும் போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன்னுடைய இசையால் ஹாரிஸ் ஜெயராஜ் திரும்பி பார்க்க வைத்தார். அந்தத் திரைப்படம் தான் இவருடைய முதல் படம் என யாராவது கூறினால் பலரும் அதனை ஏற்க மாட்டார்கள். ஏனென்றால் தன்னுடைய முதல் படத்திலேயே இசையில் ரசிகர்களை வசியப்படுத்தும் அளவுக்கு இசையமைத்திருந்தார். அதன் பிறகு பல இயக்குனர்களுடன் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்து பணியாற்றியுள்ளார்.

தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் தான் வளர்ந்து வந்த காலத்தில் விஜயின் 10 படங்களுக்கு தொடர்ந்து நோ சொல்லிக் கொண்டு வந்துள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த தகவலை பகிர்ந்து உள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் விஜயின் 10 படங்களுக்கு தொடர்ந்து நோ சொல்லிக் கொண்டு வந்தேன். பதினோராவது படத்தில் தான் நான் கமிட்டானேன். அதற்கு காரணம் ஒரே நேரத்தில் என்னால் பல படங்களில் கவனம் செலுத்த முடியாது. நான் இசையை நெருக்கடியில் உண்டாக்க விரும்பவில்லை.

அந்தப் படத்தில் ஒரு பாடல் கொடுக்க வேண்டும் மற்றொரு படத்திற்கு இன்னொரு பாடல் கொடுக்க வேண்டும். ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார், அவருக்கு பாடல் கொடுக்க வேண்டும் என நான் கமிட்மென்ட் கொடுத்து விட்டால் அது தண்டனை போல் ஆகிவிடும். அப்படி ஒரு விஷயத்தை என்னால் செய்ய முடியாது என ஹாரிஸ் ஜெயராஜ் கூறியுள்ளார். இவருடைய பேச்சில் தற்போது ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாரிஸ் ஜெயராஜ் கலந்த 2012 ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் தான் விஜயுடன் இணைந்து பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

30 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

31 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

44 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

1 மணத்தியாலம் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

2 மணத்தியாலங்கள் ago