லெட்டர் எழுதி வச்சுட்டு படப்பிடிப்பிலிருந்து ஓடிய ஊர்வசி.. காரணத்தைக் கேட்டா நீங்களே சிரிச்சிடுவீங்க..!

By Nanthini on மார்கழி 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பு மற்றும் நகைச்சுவையால் எக்கச்சக்கமான ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இன்றும் இறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஊர்வசி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளில் டாப் நடிகர்களுடன் அவர்களுடைய நடிப்புக்கு ஈடு கொடுத்து தனது அசாத்திய நடிப்பால் அசத்தியவர். தமிழில் பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற திரைப்படம் மூலம் தான் கதாநாயகியாக சினிமா உலகிற்குள் நுழைந்தார். கவிதா ரஞ்சனி என்ற இயற்பெயர் கொண்ட இவர் சினிமாவுக்காக தன்னுடைய பெயரை ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார்.

முதன்முறையாக மகளுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்ட ஊர்வசி

   

பல சூப்பர் ஹீரோக்களுடன் நடித்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஊர்வசி கேரளா நடிகர் மனோஜ் ஜெயின் என்பவரை 2000 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேஜலக்ஷ்மி என்ற மகளும் உள்ளார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். மகள் தேஜலக்ஷ்மி தந்தை மனோஜுடன் வாழ்ந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு சிவ பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஊர்வசி 43 வயதில் மகனுக்கு தாயானார். தற்போதும் ஊர்வசி பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.

   

Actress Urvashi says Harassment in Tamil Cinema, தமிழ் சினிமாவிலும் பாலியல் தொந்தரவு- நடிகை ஊர்வசி

 

இந்த நிலையில் ஊர்வசி சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அதில், எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்ததே பாக்கியராஜ் சார்தான். இன்னொருத்தங்க நடிக்க வேண்டிய வாய்ப்பு தான் முந்தானை முடிச்சு படத்துல எனக்கு கிடைச்சது. எனக்கு சேலை கட்டி நடிக்க சொல்லி கொடுத்ததே பாக்கியராஜ் சார் தான். அவர் சொல்லுவாரு நான் நடிப்பேன். என்னை ஏதாவது திட்டுனா சாயங்காலம் ட்ரெயினுக்கு கிளம்பி போயிருவேன். அப்படி சொல்லி சொல்லியே படம் ஃபுல்லா நடிச்சு முடிச்சேன். என்னை யாரும் எந்த தொந்தரவும் பண்ணல. சூட்டிங் வரும்போது கூட எதையும் தயார் பண்ணிக்கிட்டு வர மாட்டேன்.

Hema Committee Report: "இப்படிப்பட்ட ஆண்கள் மத்தியில்தான் பணியாற்றினோமா..." - நடிகை ஊர்வசி காட்டம் | Actress Urvashi about sexual harassment against women in the Malayalam film industry ...

நான் very bad ஸ்டுடென்ட் தான். அதே மாதிரி என்ன பொறுத்த வரைக்கும் லவ் என்றால் லைட்டா ஒருதர ரொமான்ஸ் லுக்குல பார்த்து சிரிச்சாவே லவ் தான். நான் எப்பவும் மூஞ்ச டெரரா தான் வச்சுக்கிட்டு இருப்பேன். யாராவது என்ன நல்லா நடிக்க சொன்னா ஓடிடுவேன். ஒரு டைம் இயக்குனர் ஒருத்தருக்கு நான் அப்படிதான் லெட்டர் எழுதினேன். அன்புள்ள இயக்குனர் அவர்களுக்கு, என்னால் என்ன நடிக்க முடியுமோ அதை தான் நடிப்பேன் நல்லா நடிங்கன்னு சொன்னா நல்லா நடிக்கிற பொண்ண வச்சு நீங்களே நடிச்சுக்கோங்க. எனக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையை கூட நான் திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று லெட்டர் எழுதிக் கொடுத்துட்டு நான் பாட்டுக்கு போயிட்டேன். அடுத்த நாள் அதே மாதிரி வந்து அவர் நடிக்கவும் கூப்பிட்டாரு என்று படபிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை ஊர்வசி பகிர்ந்து கொண்டார்.