Categories: சினிமா

என் அம்மா நல்லா தான் இருக்காங்க.. காட்டு தீயாய் பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை உமா ரியாஸ்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் இருந்து அம்மா மற்றும் குடும்ப தலைவி உள்ளிட்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் கமலா காமேஷ்.  மறைந்த நடிகர் விசுவின் பெரும்பாலான படங்களில் தோன்றி நடிப்பில் முத்திரை பதித்தார். தமிழில் சிறந்த குடும்ப திரைப்படமாக இருந்து வரும் சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் கோதாவரி என்ற கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். கமலா காமேஷ் என்று சொன்னாலே இவருடைய அந்த கோதாவரி கதாபாத்திரம் தான் அனைவருடைய நினைவுக்கும் வரும். 1996 காலகட்டத்தில் சினிமா படப்பிடிப்பின் போது இடுப்பில் காயமடைந்த நிலையில் 7 ஆபரேஷன் செய்து கொண்டார்.

தன்னுடைய இடுப்பு வலியையும் பொருட்படுத்தாமல் நடிப்பை தொடர்ந்த நிலையில் 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடிப்புக்கு பிரேக் எடுத்தார். கடைசியாக தமிழில் என் உயிரினும் மேலான என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு சுமார் 15 ஆண்டுகள் கழித்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷம் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். சினிமாவில் விருப்பமில்லாமல் நடிக்க வந்ததாக கூறிய கமலா காமேஷ் 500க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் 1974 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு உமா என்ற ஒரே ஒரு பெண் குழந்தை பிறந்தது.

திடீர் உடல்நலக் குறைவால் காமேஷ் உயிரிழந்த நிலையில் நடிகையாகவும் சிங்கிள் மதர் ஆகவும் தன்னுடைய மகள் உமாவை வளர்த்துள்ளார். கமலா காமேஷ் மகள் உமா சினிமாவில் நடிகையாக நடித்து வரும் நிலையில் அன்பே சிவம், தூங்காவனம் மற்றும் மௌனகுரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவ்வாறு நடிகர் ரியாஸ் கானை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இப்படியான நிலையில் இன்று காலை கமலா காமேஷ் உயிரிழந்து விட்டதாக ஒரு செய்தி வெளியானது.

இந்தச் செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது கமலா காமேஷ் மகளும் நடிகையுமான உமாரியாஸ் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது தனது தாய் கமலா காமேஷ் 72 வயதில் காலமானதாக வெளியான தகவல் ஒரு வதந்தி. உயிரிழந்தது என்னுடைய அம்மா இல்லை, என் கணவர் ரியாஸ் கானின் அம்மாவும் தன்னுடைய மாமியாருமான ரஷீதா பானு தான் இறந்துவிட்டார். அவர் சில வருடங்களாக உடல் நல பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 72 என உமா ரியாஸ் விளக்கம் அளித்துள்ள நிலையில் கமலா காமேஷ் இறந்ததாக வெளியான தகவல் வதந்தி என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

Nanthini

Recent Posts

“எவன் கூட டீ கள்ளத்தொடர்பு?”…. விஷம் குடிக்க மறுத்த மனைவி… கதறிய 3 வயது குழந்தை…. பழனியில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்….!

குடும்பத் தகராறும் சந்தேகமும்திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவருக்கும், ரூபி…

8 minutes ago

“பழிக்கு பழி வாங்க இப்படி ஒரு ஸ்கெட்ச்சா?”… யூடியூப்பில் ‘அதை’ தேடிப் பார்த்த விவசாயி… நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம்… பதறவைக்கும் பின்னணி….!

இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது…

15 minutes ago

BREAKING: அதிமுகவில் மேலும் 5 பேர் ராஜினாமா செய்தனர்…. EPS-ஐ அதிரவைத்த மாஜி அமைச்சர்களின் மூவ்…. உச்சக்கட்ட பரபரப்பு….!

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே எஸ்பி வேலுமணி,…

21 minutes ago

வைகோ சொன்ன ‘அந்த’ ரகசியம்.. திமுகவின் அடுத்த மூவ்…. தவெக-வை வீழ்த்த ஸ்டாலின் போட்ட ரகசிய கணக்கு… அம்பலமான அரசியல் வியூகம்….!

தமிழக முதலமைச்சர் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு, மாநில அரசியலில்…

29 minutes ago

“பதவியும் வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்”…. EPS முகத்தில் காகிதத்தை எறிந்த 9 மூத்த தலைவர்கள்… கதிகலங்கிப் போன எடப்பாடி…. விடிய விடிய நடந்த சதி….!

அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் மீண்டும் வெடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர்…

36 minutes ago

தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா… ஆளுங்கட்சியை உலுக்கும் குதிரை பேர விவகாரம்…. வெளியான பகீர் தகவல்…!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…

1 மணத்தியாலம் ago