நடிகை கமலா காமேஷ் தமிழ் சினிமாவில் பிரபலமாக பணியாற்றிய குணச்சித்திர நடிகை ஆவார். 1970 கள் என்பதுகளில் அதிகப்படியான படங்களில் அம்மா வேடங்களில் நடித்து பிரபலமானார். “சம்சாரம் அது மின்சாரம்” படத்தின் மூலமாக புகழின் உச்சிக்கு சென்றார் கமலா காமேஷ். இவருக்கு அந்த படத்தில் கோதாவரி என்ற பெயர் வைத்திருந்தனர். அந்த பேரும் கூட பிரபலமானது. அது மட்டுமில்லாமல் விசு இயக்கிய பல திரைப்படங்களில் கமலா காமேஷ் நடித்திருக்கிறார்.
1971 ஆம் ஆண்டு வெளியான “குடிசை” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கமலா காமேஷ் “அலைகள் ஓய்வதில்லை” திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு அம்மாவாக நடித்தார். பின்னர் “குடும்பம் ஒரு கதம்பம்” திரைப்படத்தில் இவர் ஏற்ற லட்சுமி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் நடித்த அம்மா கதாபாத்திரங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் தொடர்ந்து அது போன்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் கமலா காமேஷ்.
மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், மூன்று முகம், கோபுரங்கள் சாய்வதில்லை, ஆகாய கங்கை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் கமலா காமேஷ். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார் கமலா காமேஷ். மொத்தம் 450 திரைப்படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார் கமலா காமேஷ்.
இசையமைப்பாளர் காமேஷை திருமணம் செய்து கொண்டார் கமலா. இவர்களுக்கு ஒரே மகள் உமா. இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மௌனகுரு, மரியான், தூங்காவனம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்த ரியாஸ்கான் என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…