Connect with us

நடிகை திரிஷாவுக்கு இப்படி ஒரு ஆசையா..? அதுவும் அந்த சமயத்துல.. வைரலாகும் ஓல்ட் வீடியோ..!

CINEMA

நடிகை திரிஷாவுக்கு இப்படி ஒரு ஆசையா..? அதுவும் அந்த சமயத்துல.. வைரலாகும் ஓல்ட் வீடியோ..!

 

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. தமிழ் திரையுலகில் ஜோடி என்கின்ற திரைப்படத்தில் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான திரிஷா, அதைத் தொடர்ந்து மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

   

மௌனம் பேசியதே திரைப்படத்திற்கு பிறகு மனசெல்லாம், சாமி, எனக்கு 20  உனக்கு 18,கில்லி  உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை திரிஷா நடிகை ஆவதற்கு முன்பு மாடல் அழகி என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். 1999 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டத்தை வென்றவர். தமிழில் தற்போது டாப் நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களுடன் சேர்ந்து இவர் நடித்திருக்கின்றார்.

கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிசை தொடங்கியிருக்கிறார் திரிஷா.

அதற்கு முன்பு வரை சற்று சறுகளில் இருந்த திரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் மீண்டும் டாப் நடிகை என்ற அந்தஸ்தை கொடுத்து விட்டது, விஜயுடன் லியோ திரைப்படத்தில் நடித்து பிரபலமான திரிஷா. தற்போது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்த வருகின்றார். அது மட்டும் இல்லாமல் கமலஹாசன் அவர்களின் தக் லைஃப் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

இப்படி மீண்டும் பிஸியாக நடித்து வரும் நடிகை திரிஷாவுக்கு ஒரு ஆசை இருக்கின்றது. திரிஷா நடிகை ஆவதற்கு முன்பு மிஸ் சென்னை போட்டியில் வெற்றி பெற்றிருந்தார். அதனை தொடர்ந்து இன்டர்வியூ ஒன்றை கொடுத்திருந்தார்.

அதில் தனக்கு ஒரு நாளாவது ஆணாக பிறக்க வேண்டும் என்று ஆசை. ஆண் எப்படி நடந்து கொள்வார். அவரின் ஆட்டிட்யூட் மற்றும் பாடி லாங்குவேஜ் எப்படி இருக்கும், அவர்களைப் போல ஒரு நாளாவது வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by missy :): (@talkactive_one)

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top