தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை ஆக டைட்டிலை வென்றவர். அதனைத் தொடர்ந்து சினிமாவில் களமிறங்கிய அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மட்டுமல்லாமல் இந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தன்னுடைய ரீ என்ட்ரியில் விஜய், அஜித் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகின்றார். தொடர்ந்து விஜயுடன் லியோ மற்றும் கோட் திரைப்படங்கள் திரிஷா நடிப்பில் வெளியாகிய அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கமல்ஹாசன் உடன் தக் லைப் மற்றும் அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி திரைப்படங்களிலும் திரிஷா நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களுமே அடுத்தடுத்த ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. நடிகை திரிஷா தொடர்ந்து 20 ஆண்டுகளை கடந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வருகின்றார். ரஜினி, கமல், விஜய், அஜித் மற்றும் சூர்யா என கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் இணைந்த இவர் நடித்துள்ளார். அதனைப் போலவே மற்ற மொழிகளிலும் திரிஷா முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
பாலிவுட் படங்களிலும் நடித்துள்ள நிலையில் தான் இந்தியா நடிகையாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். சில காலங்கள் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த திரிஷாவுக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளன. குறிப்பாக மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திரிஷா அடுத்தடுத்து தான் வெளிநாடுகளுக்கு செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது திரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்ற போது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ‘Miss Chennai’ பட்டம் வென்ற நடிகை திரிஷா, அந்த சமயத்தில், தனக்கு நடிப்பின்மீது ஆர்வம் இல்லை என்றும் முழுக்க முழுக்க மாடலிங் துறையில் பயணிக்க உள்ளதாகவும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…
பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…
கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…
மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…