Categories: சினிமா

கமல் சாரின் அந்த படங்களை 40 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன்… நடிகை திரிஷா பகிர்ந்த சுவாரஸ்யம்..!..!

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. தென்னிந்தியாவின் குயின் என்று அழைக்கப்பட்டு வரும் இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார் திரிஷா.  அஜித்துடன் திரிஷா நடித்த விடாமுயற்சி திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் அஜித்துடன் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் திரிஷா ஜோடியாக நடித்துள்ள நிலையில் அந்த திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. மறுபக்கம் கமல்ஹாசனின் தக்லைஃப் திரைப்படத்திலும் இவர் நடித்து முடித்துள்ள நிலையில் சூர்யாவின் 45 வது திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

இதனால் திரிஷா பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து அவர் திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளதால் அவருடைய ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.  வயது 40 ஐ கடந்தாலும் தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் தேர்வில் திரிஷா தான் முதலிடம் பிடித்துள்ளார். இன்று வரை முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாகவும் தற்போது வரை நடித்து வருவது வியப்பை அளிக்கிறது. இப்படியான நிலையில் மன்மதன் அம்பு திரைப்படம் மூலம் கமலுடன் இணைந்து நடித்த திரிஷா அதன் பிறகு தூங்காவனம் திரைப்படத்தில் போலீசாக நடித்து கமலுடன் சண்டை காட்சிகளில் அசத்தியிருந்தார்.

இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தக்கலைப் திரைப்படத்தில் திரிஷா கமலுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படியான நிலையில் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கமல் மற்றும் திரிஷா இருவரும் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய திரிஷா, நடிகர் கமல்ஹாசனின் படங்களை நிறைய பார்த்திருக்கின்றேன்.

குறிப்பாக தேவர் மகன், நாயகன், மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்களை கிட்டத்தட்ட 30 லிருந்து 40 முறைக்கு மேல் பார்த்து விட்டேன். விக்ரம் திரைப்படத்தை திரையரங்கிலேயே மூன்று முறை சென்று பார்த்தேன். பிறகு இரண்டு முறை வீட்டில் பார்த்தேன். கமல் சார் படங்களை பார்த்தது தான் நான் வளர்ந்தேன். 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நாம் எல்லோரும் அவருடைய படங்களை பார்த்து தான் வளர்ந்து இருக்கிறோம். இந்தப் படங்கள் தான் நீங்க கேட்டதும் எனக்கு உடனே ஞாபகத்திற்கு வர திரைப்படங்கள் என்று கமல்ஹாசன் படங்களை த்ரிஷா புகழ்ந்து பேசி உள்ளார்.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

5 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

6 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

6 மணத்தியாலங்கள் ago